அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 1000 கோடிக்கு மேல் ஊழல்: விரிவான விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 7 ஆண்டில் 1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில்  தோல்வியடைந்த 3.02 லட்சம் மாணவ, மாணவியர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் 73,733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் நடந்த முறைகேடுகள் குறித்து மீனா என்ற மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தான் லஞ்ச தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிந்துள்ளனர். 

ஒரு மாணவியால் இந்த ஊழல் குறித்த ஆதாரங்களைத் திரட்ட முடிந்திருக்கிறது என்றால், இந்த ஊழல் எவ்வளவு காலமாக, எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கும் என்பதை உணரலாம். கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 26 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 20 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் சுமார் 200 கோடி சட்டப்பூர்வமாகவே வசூலித்துள்ளது. 7 ஆண்டுகளாக மறுமதிப்பீட்டில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றாலும் கூட, அதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐயம் ஏற்படவில்லை. விசாரணைக்கும் ஆணையிடவில்லை. அப்படியானால் ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த ஊழலுக்கு உடந்தை என்று தான் கருத வேண்டியுள்ளது.

மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு விடைத்தாளுக்கும் 10,000 வீதம் கையூட்டு வசூலிக்கப்பட்டிருக்கிறது. 7 ஆண்டுகளில் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்ற 20 லட்சம் மாணவர்களில் பாதிப் பேர் ஒரே ஒரு தாளுக்கு 10,000 கையூட்டு  கொடுத்ததாக வைத்துக் கொண்டால் கூட கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 1000 கோடிக்கும் கூடுதலாக ஊழல் நடந்திருக்க வேண்டும். 

இந்த ஊழல் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி நிலையில் மட்டும் நடந்திருக்க முடியாது. துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலாளர், அமைச்சர், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக அஞ்சல்வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது.  இது குறித்தும் விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018