சுமந்திரனின் சட்ட நிபுணத்துத்தை நினைத்து பெருமை கொள்வதா அல்லது தலைகுனிவதா? வரதராசா பார்த்தீபன் கேள்வி

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களால் தமிழ்மக்களின் உரிமை மற்றும் அவர்களின் வாழ்வியல் தொடர்பாக உள்ள இடர்களை நீக்குவது தொடர்பாகவும் நீதிமன்றில் இதுவரை எந்த வழக்குகளையும் தொடராமல் இருப்பது ஏன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான வரதராசா பார்த்தீபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்.மாநகரசபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு உறுப்பினரான விஸ்வலிங்கம் மணிவண்ணனின் வதிவிடம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் மணிவண்ணனுக்கு இன்று இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாதங்களையடுத்து இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வரதராசா பார்த்தீபன்மேலும் கேள்வி எழுப்புகையில்,முள்ளிவாய்கால் இனவழிப்பு தொடர்பாக நீதிமன்றில் வழங்குத் தொடர எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, சூறையாடப்படுகின்ற தமிழ்மக்களின் பாரம்பரிய நிலங்கள் தொடர்பாக வழக்கு தொடர்ந்து நீதிக்காக போராட்ட முயலாத ஜனாதிபதி சட்டத்தரணி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்த ஒரு வழக்கையும் தாக்கல் செய்து வாதாடாத ஜனாதிபதி சட்டத்தரணி ஒரு சாதாரண மனிதனின் வதிவிடம் தொடர்பில் வழக்கு தொடர்ந்து வாதிட்டு தனது சட்ட நிபுணத்துத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதனை நினைத்து பெருமை கொள்வதா அல்லது தலைகுனிவதா எனவும் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

முதல் முதலில் மணிவண்ணன் மீது வழக்கு போடுமாறும் அணுகிய நபரையும் அவரிடம் கோரிக்கை விட்ட மாகாணசபை உறுப்பினரையும் நாம் அறிவோம். முதலில் இவர்கள் அணுகிய நபர் வழங்குத் தொடர மறுக்கவே இவர்கள்; வேறு ஒரு நபரின் ஊடாக வழக்கு தொடர்ந்தார். அந்த நபரை யாருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றது என்றும் யாரின் திட்டமிடலுடன் இதுவெல்லாம் நடைபெற்றது என்றெல்லாம் நாம் அறிவோம்.இதில் காட்டிய அக்கறை இதில் காட்டிய கரிசனை அவசரம் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையில் காட்டியிருந்தால் மிகச்சிறப்பானது.</p>

யாழ்.மாநகர சபையில் மணிவண்ணனின் விதிவிடம் தொடர்பான வழக்கை தொடர்ந்து, அது தொடர்பில் தடை உத்தரவைப் பெற்றவர்கள் அச்சபையிலேயே இவ் விடயத்தை ஒத்த நிலையில் தற்போதும் பதவி வகிக்கின்ற, ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவருக்கும் மாநகரசபையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்த கட்சியைச் சேர்ந்த இருவருக்கும் என மொத்தமாக உள்ள நான்கு பேருக்கும் ஏதிராக ஏன் வழக்குத் தொடரவில்லை? நீதியை நிலை நாட்டவில்லை?

அத்துடன் மணிவண்ணன் மீது வழங்குத் தொடர்வதற்கு கடுமையான உழைத்த ஒரு மாகாணசபை உறுப்பினரின் நண்பன் தற்போதும் சாவகச்சேரியின் உள்ளுராட்சி சபை ஒன்றின் ஒரு முக்கிய பதவியில் உள்ளார் அவர் மீதும்; இதே வழக்கு போடும் தகுதியிருந்தும் அவர் மீது அவர்கள் வழக்குத் தொடராமல் இருப்பதன் மாயம் என்ன?

ஆக தமது, தாம் பயணிக்கின்ற நிகழ்ச்சி நிரல்களில் தடைகளை உருவாக்குபவர்களை மட்டும் சட்டம், ஒழுங்கு என்பன கொண்டே அடக்குவார்கள் அல்லது அகற்றுவார்கள் என்பதையே இவ்வாறான சம்பவங்கள் செயற்பாடுகள் தெளிவுபடுத்துகின்றதெனவும் வரதராஜன் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018