"நட்பே எனது வலிமை" புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் சோனாலி பிந்த்ரே உருக்கம்

மெட்டாசிஸ் புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் சோனாலி பிந்த்ரே தலையை மொட்டையடித்த புகைப்படத்தை பதிவிட்டு நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார். 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ படத்தில் அறிமுகமாகி பிறகு பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சோனாலி பிந்த்ரே. தமிழில் இவர் நடித்த ’காதலர் தினம்’ திரைப்படம் இந்தியளவில் இவரை பிரபலமடைய செய்தது. 

திருமணத்திற்கு பிறகு கணவர் மற்றும் மகனுடன் மும்பையில் வசித்து வரும் சோனாலி பிந்த்ரே, சமீபத்தில் தனக்கு மெட்டாசிஸ் வகையை சேர்ந்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் அறிவித்தார். 

இவரது அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சி அளித்த நிலையில், குடும்பம் மற்றும் நண்பர்களின் துணைக்கொண்டு புற்றுநோயிலிருந்து மீண்டு வருவேன் என அவர் நம்பிக்கையோடு தெரிவித்தார்.தற்போது அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோனாலி, இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தன்னுடைய நண்பர்களோடு இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில் நொடிக்கு நொடி நான் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறேன். சிகிச்சையின் போது ஏற்படும் வலிகள் என்னுடைய சக்தியை குறைத்துவிட்டன. இருப்பினும் தற்போது மிகவும் உற்சாகமாக உள்ளேன். 

அதற்கு காரணம் என்னுடைய நண்பர்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என் நண்பர்களே எனது வலிமையின் தூண்கள். என் மீது எப்போதும் அன்பை பொழிந்து வருகிறார்கள். 

பரபரப்பாக இருக்கும் நேரத்தில் கூட என்னை அழைத்துப்பேசி, தகவல்களை பரிமாறி என் மீது அக்கறை செலுத்துகின்றனர். இதனால் நான் எப்போதும் தனியாக இருப்பது போல உணர்ந்ததில்லை. உண்மையான நட்பு இதுதான் என்று எனக்கு காட்டிய நண்பர்களுக்கு நன்றி. அனைவருக்கும் என் இதயம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் என இந்த பதிவில் சோனாலி பிந்த்ரே உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். 

திரைத்துறையில் சோனாலி பிந்த்ரே பல ஆண்டுகள் இருந்து வந்தாலும், அவரது நெருங்கி நண்பர்களாக அறியப்பட்டவர் தபு, ஐஸ்வர்யா ராய், கரிஷ்மா கபூர் உள்ளிட்டோர். தவிர, நடிகர் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சுனைனா கானும் சோனாலிக்கு நெருக்கமானவர். 

இன்ஸ்டாகிராமில் சோனாலி பிந்த்ரே வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் சிகிச்சைக்காக தனது முடியை கலைந்து மொட்டையடித்துள்ளார். அந்த புகைப்படத்தில் சோனாலியுடன் இந்தியாவின் முன்னாள் பிரபல மாடலான காயத்ரி ஓபராய் மற்றும் ஹிருத்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுனைனா கான் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018