வடக்கு மக்களின் வீடில்லா பிரச்சினைக்கு தீர்வு அவசியம்: ரிஷாட் பதியுதீன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுப்பதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை, கூடிய கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னார், நறுவிலிக்குளத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“யுத்தக் காலத்தில்  இடம்பெயர்ந்து சென்ற மக்கள், மீண்டும் தாம் வாழ்ந்த பகுதிகளுக்கு வந்து வீடுகள் இல்லாதமையால் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்தவகையில் இப்பகுதியிலுள்ள மக்களின் முக்கிய பிரச்சினையாக  வீடில்லா பிரச்சினையே காணப்படுகின்றது. ஆகையால் ஏனைய பகுதிகளை காட்டிலும் இப்பகுதியில் எழுந்துள்ள இவ்வீடில்லா பிரச்சினைக்கு உரிய நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.

மேலும் சஜித் பிரேமதாச, வீடுகள் அற்றவர்களை வீடுகள் உள்ளவர்களாக மாற்றும் நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றார்.

இவரது இத்திட்டத்தின் ஊடாகத்தான் வடக்கிலும் மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தவகையில் வடக்கில் இதுவரை 34 மாதிரி கிராமங்களை அவரது அமைச்சு அமைத்து வழங்கி உள்ளது.

இதேவேளை  மன்னார் மாவட்டத்தில் காணிகள் இருந்தால் 100 மாதிரிக் கிராமங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென சஜித் தெரிவித்துள்ளார்.

ஆகையால் வன்னி மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் அவரது செயற்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவேன்” என ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019