நாட்டிற்கு தற்போது கொள்கை மாற்றமே அவசியம்: ஜே.வி.பி

நாட்டிற்கு தற்போது கொள்கை மாற்றமே அவசியமானது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கம்பஹாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழர்களோ அல்லது முஸ்லிம்களோ, நாட்டு வளங்களை தனியாருக்கோ அல்லது வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கோ விற்பனைச் செய்ததில்லை. எனவே தமிழர்களிடமிருந்தும், முஸ்லிம்களிடமிருந்தும் நாட்டை பாதுகாக்க வேண்டுமென, சிலர் நினைப்பது தவறானதாகும்.

ஆட்சியை மாற்றுவதாலோ அல்லது ஆட்சியாளர்களை மாற்றுவதாலோ நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியாது. கொள்கை மாற்றமே நாட்டுக்கு தற்போது அவசியமானது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனாலும், அவரது அமைப்பாலும், கடந்த காலங்களில் நாட்டில் பிரச்சினைகள் காணப்பட்டன எனினும், தற்போது அந்த பிரச்சினைகள் இல்லை.

பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன் தொகையை மீளச் செலுத்துவதற்கே, நாட்டு வளங்களை விற்பனை செய்ய வேண்டியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.

நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கும் தனியாருக்கும் விற்பனை செய்துவரும் அரசாங்கத்திடமிருந்தே நாட்டைப் பாதுகாக்க வேண்டும்.

வெளிநாடுகளிடமிருந்து அதிகப்படியான கடன்களை பெற்றுள்ளதால், அரசாங்கம் நாட்டு மக்களிடமும் அதிகப்படியான வரியை விதித்துள்ளது. இவ்வாறான பிரச்சினைகளை சரிசெய்வதற்கு, நாட்டுக்கு கொள்கை மாற்றம் அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019