திராய்க்கேணி படுகொலை நாள்இன்று-06.08.1990

இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழரை இனச்சுத்திகரிப்பு செய்த நாள் மறக்கமுடியாதா முஸ்லிம்களின் பாசிச படுகொலைக்கு துணைபுரிந்த கறுப்பு அத்தியாயம்.சுற்றிவர வயல்நடுவே இயற்கை வனப்பான கற்றறிந்த தமிழரை அட்டப்பள்ளத்துடன் சார்ந்த தமிழ்கலாசரத்தை எடுத்துக்காட்டிய தமிழர் பூமி,சுற்றிவர சகோதரர் என்று பிட்டும் தேங்காப்பூவும் ஒற்றுமை பேசி மொத்தமாக ஒரு இனத்தின் வேரின் சிறுவர் கர்ப்பணி பெண்களின் கற்பு சூறையாடப்பட்டு தோல்மேல் தோல் கைபோட்டு பழகிய பலமுஸ்தாபக்கள் முகமட்டால் கபலீகரம் செய்யப்பட்ட பூமி.

அக்கரைப்பற்று பாலமுனை முஸ்லிம் ஒருபுறம் அட்டாளச்சேனை முஸ்லிம் மறுபுறம் மாவடிப்பள்ளிருந்து கல்முனைக்குடி முஸ்லிம் ஊர்காவல் படைகளால் சுற்றிவர எங்கும் ஓடமுடியாமல் மடத்தயடி மீனாட்சியம்மனுக்கு இரத்த அபிசேகம் செய்த நாள் .

ஓரிரண்டு குடும்பம் காரைதீவு தமிழ்பூமியை தேடிவர நிந்தவூர் சதுப்பு நிலத்தினூடாக ஓடிவரும் போது கல்முனைக்குடி மாவடிப்பள்ளி காக்காமாரால் சதுப்புநிலத்தில் புதைத்து மண்ணுக்கு இரையாக்கியநாள்.

ஒரு ஊரின் அச்சானியான ஆலயம் பாடசாலை, வயல் தீக்கரையாக்கப்பட்டு அம்பாறை மாவட்ட தமிழரை சிறுபான்மையாக்கியநாள்.

முஸ்லிம் ஜிகாத் ஊர்காவல் படையும் காரைதீவு விசேட அதிரடிப்படையும் சேர்ந்து 47 தமிழர்களைபடுகொலை செயதனர்.

சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய முஸ்லிம் ஊர்காவல் படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

இது போன்று கிழக்கில் பல நடைபெற்றது.

மறுநாள் அம்பாறை மாவட்டத்தின் தமிழ்பிரதேசங்களிலும் முஸ்லிம் கொடுறம் நடத்தப்பட்டது.

பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.

மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.

சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./” இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.

ஆனால் முஸ்லிம் தாக்குதல் தற்போதும் இடையிடையே அம்பாறை மாவட்ட ஆலயம்மீது தாக்குதல் நடைபெறுவது காணக்கூடியதாக உள்ளது.திராய்க்கேணி தாக்குதல் அங்கிருந்த மக்கள் தற்போது கூட தமது ஊர் அடையாளத்தை இழந்து கல்முனை, காரைதீவு, திருக்கோயில் போன்ற பிரதேசங்களில் வாழ்கின்றனர் வேதனையுடன்.

இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

ஆனால் இதில் தமிழர் ஒன்றை உணரவேண்டும் யாழ்ப்பாணத்தில் உயிராபத்துகள் இல்லாமல் முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு விடுதலைப்புலிகள் பலதடவை மன்னிப்பு கேட்டனர்.ஆனால் தமிழர் மீது முஸ்லிம்களால் செய்யப்பட்ட கொலைக்கு எந்த பள்ளிவாசல் முஸ்லிம் அரசியல்வாதிகள் மன்னிப்பு கேட்காதது மிக வேதனைப்படவேண்டியது.

யாழ்ப்பாணத்து முஸ்லிம் இடம்பெயர்வை மௌனஞ்சலி செலுத்தும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆனால் தமிழரின் கொலையை அஞ்சலி செலுத்துவதை தவிர்க்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக, கிழக்கு பல்கலைக்கழக தமிழ்மாணவர்களை கண்டிக்கப்பட வேண்டும்.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019