எனக்கும் ரணிலுக்கும் அல்ல டீல், ரணிலுக்கும் அனுர குமாரவுக்கும்- மஹிந்த சூடான பதில்

ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் “டீல்” போட்டது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவே எனவும், இதுவரையில் அவர் பாராளுமன்றத்தில் பிரதமருக்கு ஏற்ற விதத்திலேயே உரையாற்றி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருப்பதாகவும், இதனாலேயே வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு, லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கு என்பன ஒத்திவைக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து நேற்று (06) அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இவ்வாறு பதிலளித்தார்.

எமக்கு எதிரான விசாரணைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. இன்னும் விசாரணைகள் நடந்த வண்ணமே உள்ளன. சிலவற்றுக்கு வழக்குத் தொடர்வதற்கும் நடவடிக்கை எடுத்தேயுள்ளன.

அனுரகுமார திஸாநாயக்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அது குறித்து என்ன கூறுகிறீர்கள் எனக் கேட்டதற்கு,

“அய்யோ, அவருடன் யார் விவாதிக்கச் செல்வது” என மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார். 

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019