எம்.பிக்களின் சம்பள அதிகரிப்புக்கு ஐ.தே.க பின்வரிசை எம்பிக்கள் எதிர்ப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதனை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் எதிர்ப்பதாக ஐ.தே.க எம்.பி மரிக்கார் நேற்று தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு செயற்திட்டமும் முன்வைக்கப்படவில்லையென்றும் அவர் கூறினார்.

கடன், வரி மற்றும் வாழ்க்ைகச் செலவு காரணமாக மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் அரசியல்வாதிகள் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

மக்கள் துன்பப்படும் நேரத்தில் அரசியல்வாதிகளின் சம்பளங்களை மட்டும் அதிகரிப்பது பொருத்தமாகாது என்றும் மரிக்கார் எம்.பி சுட்டிக்காட்டினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மரிக்கார் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில் ஐ.தே.க பின்வரிசை எம்.பிக்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை முன்வைப்பரென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"மஹிந்த ஆதரவு அணியினருக்குள் பல சிக்கல்கள் உள்ளன. இவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வரை சுமார் எட்டு இலட்சம் வாக்குகளை இழந்துள்ளனர். அவர்களுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத்தான் இவர்கள் சமுகவலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளைக் கொண்டு ஆளும் தரப்பினர் மீது சேறு பூசி வருகின்றனர்," என்றும் அவர் கூறினார்.

மேலும் சிலரது அடாவடித்தனமான செயற்பாடுகள் காரணமாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதனை ஏற்றுக்ெகாள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Ninaivil

செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
செல்வன் விசாக சர்மா சாரங்க சர்மா
டென்மார்க்
டென்மார்க்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018