கோடிப் கோப்பை கால்பந்து- அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது இந்தியா

20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 6 முறை உலக சாம்பியனான (20 வயதுக்கு உட்பட்டோர்) அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்திய அணி தரப்பில் தீபக் தாங்ரி 4-வது நிமிடத்திலும், அன்வர் அலி 68-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 54-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜாதவ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பின்னர் 10 வீரர்களுடன் விளையாடிய இந்திய அணி பெற்ற முன்னிலையை போராடி தக்க வைத்து கொண்டது.

மேற்கு ஆசிய கால்பந்து பெடரேஷன் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஈராக்கை சந்தித்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈராக்கை வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் இந்திய வீரர் புவனேஷ் வெற்றிக்கான கோலை அடித்தார். ஈராக் அணியை இந்திய அணி தோற்கடித்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018