காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறிக்கும் முயற்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும் : மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 370ன் படி சிறப்பு உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

அதனையொட்டி அம்மாநிலத்தில் யாருக்கு குடியுரிமை வழங்குவது என்ற அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்கும் உறுப்பு 35எ உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது உறுப்பு 35எ-வை ரத்து செய்ய பாஜ ஆதரவு அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

முத்தலாக் பிரச்சனையில் கையாண்ட உத்தியையே பயன்படுத்தி காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையை நீதிமன்றத்தின் மூலமாக பறிப்பதற்கு செய்யப்படும் முயற்சியோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே, மத்திய அரசு இதில் தனது நிலையைத் தெளிவுப்படுத்த வேண்டும். காஷ்மீரின்  சிறப்புரிமையைப் பாதுகாப்போம் என்று அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.  

இந்தியாவில் குடியுரிமை பற்றிய சிறப்பு அதிகாரம் நாகாலாந்து, மிசோரம் முதலான மாநிலங்களுக்கு உள்ளது. குடியரசுத் தலைவரின் அறிவிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களுக்கும் அதற்கு முன்பே அங்கே இருப்பவர்களுக்கும் இடையில் வேறுபட்ட மதிப்பை அளிக்கும் நிலை புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ளது.

வழக்கு தொடுத்தவர்கள் அதையெல்லாம் எதிர்க்காமல் காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை மட்டும் எதிர்ப்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையே காட்டுகிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமையை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018