நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டின் எதிர்காலத்திற்காக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சகலரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய பேண்தகு கருத்தாய்வு வரைபினை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பேண்தகு அபிவிருத்தி கருத்தாய்வு விமர்சனங்களுக்கும், விவாதங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப்படும் என்பதுடன், விமர்சனங்களை மகிழ்ச்சியுடன் கையேற்றபோதிலும் தீர்வுகளும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்பே பெரிதும் அவசியமாகும் எனவும் கூறியுள்ளார்.

மொரகஹகந்த – களுகங்கை பாரிய நீர்ப்பாசன திட்டத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படவுள்ள 2,400 குளங்களை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பினை செய்வதற்கு தாய்நாட்டிற்கு வருகை தருமாறு வெளிநாட்டிலிருக்கும் சகல இலங்கை பொறியியலாளர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், வெளிநாடுகளுக்கு செல்லவிருக்கும் பொறியியலாளர்களுக்கு திறந்த அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டிற்கான தமது கடமைகளை நிறைவேற்ற மேலும் ஒரு சில வருடங்களுக்கேனும் தாய்நாட்டில் தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018