சிக்கியது அரிய வகை கோல் மீன்; ஏலத்தில் ரூ.5.5 லட்சத்தை அள்ளிய மீனவ சகோதரர்கள்!

பல்கார் மீனவ சகோதரர்கள் ரூ.5.5 லட்சத்திற்கு கோல் மீனை விற்றுள்ளனர். 

மும்பை - பல்கார் கடற்பகுதியில் மகேஷ் மெஹர் மற்றும் அவரது பரத் ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர். தங்களுடைய சிறிய சாய் லட்சுமி என்ற படகில் மீன் பிடித்தனர். முர்பே கடற்பகுதியில் இருந்து பாம்ப்ரெட் உள்ளிட்ட மீன்களைப் பிடித்துக் கொண்டு, கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கோல் மீன்(Ghol Fish) வலையில் சிக்கியது. 

30 கிலோ எடை கொண்ட இந்த மீன், மிகவும் சுவையானது. இதன் உடல் உறுப்புகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. இதற்கு ’தங்க இதயம் கொண்ட மீன்’(Fish with a heart of gold) என்ற சிறப்பு பெயரும் உண்டு. விலை மதிப்பற்ற இந்த மீன், நேற்று முன் தினம் சிக்கியுள்ளது. இவை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 

இதில் குறைந்த தரம் கொண்ட மீன்கள் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விலை போகும். கடந்த மே மாதம் பயந்தர் மீனவரான வில்லியம் காப்ரு, உயர்தர கோல் மீனான உதானை ரூ.5.16 லட்சத்திற்கு விற்றுள்ளார். இந்த கோல் மீனில் உயர் தர கொலாஜன் இருக்கிறது. இதனை காஸ்மெடிக் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பிற்கு பயன்படுத்துகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் கோல் மீன்களுக்காக தேவை அதிகரித்து வருகிறது. மெஹர் சகோதரர்களுக்கு கோல் மீன் கிடைத்த செய்தி காட்டுத்தீ போல் பரவியது. ஏலம் தொடங்கிய 20 நிமிடங்களில் ரூ.5.5 லட்சத்திற்கு விலை போனது. 

இதுதொடர்பாக பேசிய மகேஷ், ஒவ்வொரு மீனவருக்கும் கோல் மீன் சிக்க வேண்டும் என்பது கனவாகவே இருக்கிறது. யாராவது கிடைத்தால், லாட்டரியில் பணம் கொட்டுவது போலத் தான். இதன்மூலம் கிடைக்கும் பணம், எங்கள் பொருளாதார கஷ்டத்தை பூர்த்தி செய்ய பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறினார். 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019