சபாநாயகரின் செயற்பாடுகள் எதிர்க்கட்சியின் வகிபாகத்தை மீறும் ஒன்றாகவே அமைந்துள்ளது

சபாநாயகர் கருஜயசூரியவின் செயற்பாடானது எதிர்க்கட்சியின் வகிபாகத்தை மீறும் ஒன்றாகவே அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி, சிங்கப்பூர் ஒப்பந்தம் என நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளன.

ஆனால், இவற்றை நாடாளுமன்றில் விவாதிப்பதில் பாரிய சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது, பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒருங்கிணைந்த எதிரணி உறுப்பினர் ஒருவருக்கு வழங்கக் கூடாது, முடியாது என சபாநாயகர் கருஜயசூரிய உறுதியாகத் தீர்மானித்துள்ளார்.

அதேநேரம், இந்தப் பதவியை ஒருங்கிணைந்த எதிரணியான எமக்கு வழங்கலாமா அல்லது சம்பந்தனிடமே இருக்கலாமா என்பதற்கான ஆலோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரிடம் சபாநாயகர் கேட்டுள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரியவின் இந்தச் செயற்பாடானது, எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் ஒரு செயற்பாடாகவே காணப்படுகிறது. அரசாங்கத்தின் பிழைகள் அனைத்தும் எதிர்க்கட்சி வாயிலாகவே மக்களுக்குத் தெரியவரும் நிலையில், இது எதிர்க்கட்சிகளின் உரிமையை இல்லாதொழிக்கும் ஒன்றாகவும் காணப்படுகிறது.

அத்தோடு, நாடாளுமன்றின் செயற்பாடுகள், உறுப்பினர்களின் சம்பள விவகாரம், எதிர்க்கட்சிகளின் உரிமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்றின் செயலாளரிடம் ஆலோசனை பெற்றுள்ள விடயமும் ஏற்புடையதல்ல.

நாடாளுமன்றின் ஒழுங்குகளை சபாநாயகர் பாதுகாக்க வேண்டுமே ஒழிய, நாடாளுமன்றின் பொதுச்செயலாளர் அல்ல. நாடாளுமன்றின் செயலாளருக்கு உறுப்பினர்களின் சம்பளத்தையெல்லாம் நிர்ணயிக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை.

தனக்கான அதிகாரத்தையெல்லாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருக்கும், நாடாளுமன்றின் செயலாளருக்கும் வழங்கி சபாநாயகர் செயலிழந்த நிலைமையிலேயே காணப்படுகிறார்“ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019