ஜெ.வுக்கு பிறகு மற்றொரு சகாப்தமும் முடிந்துவிட்டதே.. ஜெ.தீபா வேதனை

கருணாநிதியின் மறைவுக்கு ஜெ.தீபா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் அம்மாவுக்கு பிறகான மற்றொரு சாகப்தம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு நிகழ்ந்துள்ளது. தமிழக அரசியலில் மாபெரும் புகழ்மிக்க தலைவர்களாக இருவரையும் உணர்கிறேன். திரு.கருணாநிதி அவர்கள் தனது இளம்பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்டிருந்தவர்.

அவரது இலக்கிய பங்களிப்புகளும், தமிழ் இலக்கியத்தின் கண் அறிவார்ந்த பாடல்ககள், மேலும் தமிழ் திரைப்படங்களில் ஓர் திரைக்கதை எழுத்தாளர் போன்ற படைப்புகள் அனைத்தும் தொன்மைமிக்க பாரம்பரியத்தை நினைவூட்டுகின்றன.

சிவாஜி நடிப்பில் வெளிவந்த பராசக்தி மற்றும் நவீன சினிமாவின் பாலைவன ரோஜாக்கள் ஆகிய படங்களுக்கு அவரே திரைக்கதைகளையும் உரையாடல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் தனது நெருங்கிய நண்பரான டாக்டர். எம்.ஜி.ராமசந்திரன் அவர்களோடு இணைந்து திரைக்கதைகள் எழுதியுள்ளார்.

அரசியலையும் தாண்டி திரு.கருணாநிதியும் எம்.ஜி.ஆர்-ரும் நெருங்கிய நட்பு பாராட்டியார்கள். அதேபோல எனது அத்தையும் மறைந்த தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அவர்களுடன் திரைத்துறையில் பயணித்து, பின்னாளில் அரசியல் போட்டியாளராகவும் திரு.கருணாநிதி உருவெடுத்தார்.

இவ்விருவரும் பல ஆண்டுகள் அரசியல் வானில் சமமாக பயணித்தவர்கள். கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக திமுக என்னும் கட்சிக்கு தலைவராக இருந்தது மட்டுமின்றி அனைவரையும் கவரும் வகையில் பயணித்தது என்பது மறுக்கமுடியாத ஒன்று. ஓர் தலை சிறந்த நபரை நான் இழந்துவிட்டேன்.

திரு.கருணாநிதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ஜெ.தீபா தெரிவித்துள்ளார்


Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018