கருணாநிதிக்கு முதல் தலைவராக தினகரன் மலரஞ்சலி!

மரணம் - இயற்கைக்கு அப்பாற்பட்டது என்பதை காலம் தெளிவுபடுத்தி கொண்டே இருக்கிறது. அது கருணாநிதியின் மரணத்திலும் வெளிப்பட்டு போகிறது. பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் சரியாக 5.30 மணிக்கு உடல் வைக்கப்பட்டது. ஏற்கனவே ஏராளமானோர் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை பார்க்க துடித்து காத்திருந்தனர்.

உடல் வைக்கப்பட்டதுமே முதல் ஆளாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் வந்து கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்தினார். கருணாநிதி கிட்டத்தட்ட அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில் தான் டிடிவியின் அரசியல் பயணமே விஸ்வரூபமெடுத்தது

அதனால் நேரடி மோதலோ, இணக்கமோ, சுணக்கமோ இருவருக்கும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சசிகலாவின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார் என்பதை வேண்டுமானால் நெருக்கத்தின் அறிகுறி என எடுத்துக் கொள்ளலாம். நேற்று முன்தினமும் மருத்துவமனைக்கு வந்த தினகரன் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துவிட்டு சென்றார்.

தற்போது முதல் ஆளாக அஞ்சலி செலுத்தியுள்ளார். சிறிது நேரம் கருணாநிதி உடல் அருகே இருந்தார். ராணுவ மரியாதை நடைபெறும்வரை அமைதியாக நின்றிருந்த டிடிவி தினகரன், பின்னர் அங்கிருந்த ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்றார். டிடிவி தினகரனுடன் வெற்றிவேல் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

எப்படி பார்த்தாலும் தினகரன் முதல் ஆளாக வந்து கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியது மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பிரித்து தனியே காட்டியுள்ளது. மாறுபட்ட அரசியல் தலைவர்களும் தன்னை நாடி வரும் அளவுக்கு 95 வருட கால வாழ்வை கருணாநிதி விட்டு சென்றிருக்கிறார் என்பது தினகரனின் அஞ்சலி மூலமும் தெரிய வந்துள்ளது.


Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018