மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகாமையில் நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 இன்று கருணாநிதியின் இறப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி ஏனைய நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு பாரிய பேரிழப்பாகும். கலைஞர் என்ற அடிப்படையில் ஒரு கலைஞனை இலக்கும் போது அந்த நாட்டின் உடைய கலைதுறைகள் மற்றும் ஏனைய துறைகளை பற்றி சிந்திக்க வேண்டிய தருணமாக கருணாநிதியின் உயிரிழப்புள்ளது என இவர் மேலும் தெரிவித்தார்.

 இன்று கருணாநிதியின் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள தமிழ்நாட்டுக்கு செல்லும் போது இதனை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திருந்து தனது பயணத்தை தொடரும் போது தொலைபேசி ஊடாக தெரிவித்தார்.

மேலும் இறுதி கிரியைகளில் கலந்து கொள்ள இவருடன் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ் மற்றும் வடிவேல் சுரோஷ் ஆகியோரும் தமிழகத்துக்கு சென்றுள்ளனர்.

 அத்தோடு இறுதி கிரியைகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் மற்றும் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஊவா, மத்திய மாகாண அமைச்சர்களான செந்தில் தொண்டமான், எம்.ரமேஷ்வரன் ஆகியோர் சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018