இது நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல, தொடரும் - கருணாநிதிக்கு கமல்ஹாசன் அஞ்சலி

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன் பேசும் போது, இது நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல என்றார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை ராஜாஜி அரங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது,

ஒரு நீண்ட சரித்திரத்தின் முற்றுப்புள்ளி அல்ல இது, ஒரு கமா என்று தான் நினைக்க வேண்டும். உணர்வும், இந்த சூழலும் எனது குரலை இந்த நிலைக்கு உயர்த்த முடியாத நிலைக்கு தள்ளியிருக்கிறது. கலைத்துறையில் ஒரு கடைக்குட்டி நான். நாட்டுக்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் ஒரு பெரியவரை, குடும்பத்தின் தலைவரை இழந்தது போன்ற உணர்வு இருக்கிறது. 

கலைத்துறையில் அவரது ரீங்காரம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நன்றி சொல்லும் ஆயிரமாயிரம் நடிகர்களில் நானும் ஒருவன். அந்த தமிழை பார்த்து மேலே ஏறி வந்திருக்கின்றேன். அவரை வணங்க வந்திருக்கிறேன். அவருக்கு வணக்கமும், மரியாதையும் தொடரும். இவ்வாறு பேசினார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018