கருணாநிதி உடலுக்கு ராகுல் காந்தி- தலைவர்கள் நேரில் அஞ்சலி

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் ராஜாஜிஅரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் குமாரசாமி, துணை முதலமைச்சர் பரமேஸ்வரா, புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தாமையா, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கருணாநிதி உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பிற்பகல் 2.20 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு வந்து கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018