தமிழகத்திலுள்ள அகதிகளை அழைத்து வர இந்தியா முன்வருகை

தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்களை கடல்மார்க்கமாக அழைத்துவருவதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடு திரும்பும் அகதிகளுக்கான கொடுப்பனவுகள் உரிய முறையில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைக் கூறினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை இந்தியாவிலிருந்து 9509 இலங்கை அகதிகள் அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளனர். இவர்களுக்காக இலவச விமான டிக்கட்டுக்கள் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

சமூகத்தில் இணைத்துக் கொள்வதற்காக கொடுப்பனவாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக தலா 10 ஆயிரம் ரூபாவும், 18 வயதுக்குக் குறைந்தவர்களுக்கான கொடுப்பனவாக 7,500 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக தலா ஒரு நபருக்கு 2,500 ரூபாவும், ஏனைய கொடுப்பனவாக தலா 5 ஆயிரம் ரூபாவும், நாட்டுக்குத் திரும்பியவுடன் ஒரு குடும்பத்துக்காக 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகின்றன.

இந்திய முகாம்களிலிருந்து நாடு திரும்பியவர்கள் தமது பிரதேச செயலகத்துடன் பதிவுசெய்துகொள்ளும்போது வீடு மற்றும் வீட்டுக்கான பொருட்களுக்காக 28,000 ரூபாவும் வழங்கப்படுகிறது. அதேநேரம், தற்சமயம் இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களில் 3815 பேர் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக இந்திய அரசாங்கத்தின் ஊடாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அகதிமுகாம்களில் உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக முகாம்களிலிருந்து நாடு திரும்ப விரும்பும் அகதிகள் தம்முடன் எடுத்துவரவேண்டிய பொருட்களை கடல்மார்க்கமாக நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் இதற்காக கடற்படையின் உதவியைப் பெற்றுத் தருவதற்குத் தயாராக இருப்பதாகத் தெரியப்படுத்தியுள்ளது.

தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அதிகளுக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ், பிரஜாவுரிமை சான்றிதழ், போக்குவரத்து சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பெற்றுக் கொடுக்க சென்னையில் உள்ள உப இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு திரும்பும் நபர்களுக்கு காணி, வீடு, வாழ்வாதார உதவிகள், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைளைத் தொடர்வது உள்ளிட்ட தேவைகளை எந்தவித தடையும் இன்றிப் பெற்றுக் கொடுப்பதற்கு மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமயவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019