தமிழீழமும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருணாநிதியும்

ஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நிலைப்பாடானது, பொதுவெளியில் உருவான கருத்துக்களால் மறைக்கப்படுவது என்பது துரதிர்ஷ்டவசமானது.

அதுதான் கருணாநிதிக்கு நடந்துள்ளது. 50 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்களுக்காக ஓங்கி ஒலித்த கருணாநிதியின் குரலின் மீது 2009 இல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் அவர் செயலற்று இருந்ததாக உருவான பார்வையால் களங்கப்பட்டது.

கருணாநிதியின் ஆதரவாளர்களுக்கு அவர் இன்றளவும் தமிழ் இனத்தின் தலைவர்தான். அவரது அரசியலின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் இந்த அடையாளத்தை பெருமிதத்துடன் சுமந்திருந்தார். ஆனால் அவரது இறுதிக் காலகட்டத்தில் பலரும் அவரை தமிழினத் தலைவராகப் பார்க்கவில்லை.

கருணாநிதி மீதான வெறுப்பு 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் மறைவுக்குப் பின்னர்தான் உருவெடுத்தது எனக் கூறலாம்.

ஆனால் இந்த வெறுப்பு கருணாநிதி மீது திணிக்கப்பட்ட அநீதியாகும். காரணம் கருணாநிதி இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பலருக்கும் தெரிந்த, நெருங்கிய நண்பராக இருந்தார். அவர்களது மரியாதையையும் பெற்றிருந்தார்.

பாக்கு நீரிணையில் தமிழர்கள் அடைந்த துயரத்தில் பங்கேற்பவராக, அவர்களது அரசியல் பிரச்சினைகளை நன்கு அறிந்தவராக இருந்தார். 'தமிழ் ஈழம்' என்ற அவரது கோரிக்கையுடன் நிறையப் பேர் உடன்படாவிட்டாலும் கூட, தமிழருக்கான நியாயமான தீர்வுக்காக தான் துணைநிற்கப் போவதாக அப்போது கருணாநிதி தெளிவுபடுத்தினார்.

1956 இல் சிதம்பரத்தில் நடந்த தி.மு.க. பொதுக் கூட்டத்தில் கருணாநிதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இலங்கை அரசின், ‘சிங்களம் மட்டும்’ என்ற கொள்கையைக் கண்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அது.

இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்த எஸ்.ஜே.வி செல்வநாயகத்தை கருணாநிதி நன்கு அறிந்திருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலதிபர் அ. அமிர்தலிங்கத்தின் நெருங்கிய நண்பராக கருணாநிதி இருந்தார்.

1977 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து தமிழகத்தில் பல்வெறு பேரணிகளை ஒருங்கிணைத்தவர் கருணாநிதி.

1983இல் நடந்த வன்முறைகளையும் அவர் கண்டித்தார். இலங்கையில் தமிழருக்கு எதிராக 1983 இல் நடந்த கலவரத்துக்குப் பிறகு கருணாநிதியும் தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தனர்.

1983 இற்குப் பின்னர் தமிழ்ப் போராளிகள் இயக்கங்கள் சென்னையில் தலைமை அமைத்து இயங்கத் தொடங்கின. அன்​ைறய முதல்வர் எம். ஜி. ஆரின் ஆதரவை புலிகள் இயக்கம் பெற்றிருந்த நிலையில் ரெலோ இயக்கம் தி.மு.க.வின் ஆதரவைப் பெற்றிருந்தது. அதன் நீட்சியாக தமிழீழ ஆதரவு இயக்கத்தை (TESO) கருணாநிதி உருவாக்கினார்.

1986 இல் மே மாதத்தில் மதுரையில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டை கருணாநிதி ஒருங்கிணைததார். இலங்கையில் தமிழர்கள் தங்களது சுய அதிகாரத்தைக் கோருவதற்கு டெசோ மாநாடு பரந்துபட்ட அரசியல் தளமாக இருந்தது.

மதுரை கூட்டத்தில் வாஜ்பாய், எச். என். பகுகுணா, சுப்பிரமணியன் சுவாமி, என்.டி. ராமராவ் ஆகியோரும் பங்கேற்றனர். அக்காலகட்டத்தில்தான் இலங்கையில் இயங்கிய பல தமிழர் விடுதலை இயக்கங்களுக்கு இடையே நிலவிய சகோதர யுத்தத்தை கருணாநிதி தெரிந்து கொண்டார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் ரெலோ போராளி ஒருவர் கொல்லப்பட்ட போது புலிகள் அமைப்புக்கு கருணாநிதி தனிப்பட்ட முறையில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

ரெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினத்தை விடுவிக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் புலிகள் செவிசாய்க்கவில்லை. அடுத்தடுத்து ரெலோ தலைவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதை கருணாநிதி என்றுமே மறக்கவில்லை. அதன் பின்னர் பலமுறை தனது உரையின் போது தமிழ் ஈழம் அமையாததற்கு தமிழ் இயக்கங்கள் மத்தியில் நடந்த சகோதர யுத்தமே காரணமென கருணாநிதி கூறி வந்தார்.

இந்திய அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பும் முடிவை கருணாநிதி கடுமையாக எதிர்த்தார். அமைதிப் படையின் அத்துமீறல்களை சுட்டிக் காட்டியதால் அவர் தேசவிரோதியாக சித்தரிக்கப்பட்டார்.

1989 இல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புலிகளை கருணாநிதி ஊக்குவிப்பதாக 1991 ஜனவரி 30 இல் கலைஞரின் ஆட்சி கலைக்கப்பட்டது. 4 மாதங்களுக்குப் பிறகு ராஜீவ்காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்களுக்கு இரங்கவில்லை. ஆனால் தனித்தமிழ் ஈழமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை மட்டும் அவர் அடிக்கடி நிலைநிறுத்திக் கொண்டிருந்தார்.

2000 இல் மத்தியில் வாஜ்பாய் அரசுடன் கூட்டணியில் இருந்த போது இலங்கையில் செக்கஸ்லோவாகியா மாதிரியில் தீர்வு காணலாம் என யோசனை கூறியிருந்தார்.

கருணாநிதி தனது கடைசி காலகட்டத்தில் தன்மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களை எதிர்கொண்டே வாழ வேண்டியிருந்தது. காரணம் இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போர்.

2008_-2009 காலகட்டத்தில் இலங்கைத் தமிழர்களை மீட்க கருணாநிதி போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார்.

கருணாநிதியின் உண்மையான ஆதரவாளர்கள் தமிழருக்காக அவர் ஆழமாகப் பங்களித்திருப்பதாக நம்புகின்றனர். தமிழகத்தில் தஞ்மடைந்த இலங்கை தமிழ் அகதிகள் மீது தனிப்பட்ட கரிசனை கொண்டிருந்தார் அவர். எனினும் கலைஞர் மீதான விமர்சனங்களைத் தவிர்க்க முடியாமலேயே உள்ளது.


வே. வேங்கடரமணன்

Ninaivil

திரு வேதவனம் மார்க்கண்டு
திரு வேதவனம் மார்க்கண்டு
யாழ். சாவகச்சேரி
பிரான்ஸ்
16 JUL 2019
Pub.Date: July 18, 2019
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019