தமிழ் என்றால் கலைஞர் கருணாநிதி தான் - 'பிக்பாஸ்' போட்டியாளர்கள் உருக்கம்

இன்றைய பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒருவரை போல ஒருவர் உருமாறி நடிக்கும் டாஸ்க் அரங்கேற்றப்பட்டது. மகத் மும்தாஜ் போலவும், டேனி ஐஸ்வர்யாகவும், சென்ட்ராயன் பொன்னம்பலமாகவும் என அனைத்து போட்டியாளர்களும் வேறொரு ஹவுஸ்மேட்ஸ் போல நிகழ்ச்சியில் நடித்தனர். 

சிவப்பு நிற டீ-ஷர்ட் அணிந்த குழுவில் மும்தாஜ், பாலாஜி, பொன்னம்பலம், யஷிகா மற்றும் ஜனனி இடம்பெற்றிருந்தனர். அதேபோல ப்ளூ-ஷர்ட் அணிந்த குழுவில் மகத், டேனி, ஐஸ்வர்யா, சென்ட்ராயன், வைஷ்ணவி உள்ளிட்ட போட்டியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். 

இரு குழுவினரும், ஒருவரை ஒருவர் கடுப்பேற்றி பல்வேறு உணர்களை வெளிக்கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்து விட்டால் உணர்வுகளை வெளிக்காட்டிய குழு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்படும். 

இந்த இரு குழுவினரையும் நடுவராக ரித்திகா கவனித்துக்கொண்டு தன்னுடைய கருத்துக்களை வழங்குவார். இதன்படி இன்று நடந்த டாஸ்கில் சிவப்பு நிற டீ-ஷர்ட் அணிந்த குழு சிறப்பாக விளையாடி வருவதாக பிக்பாஸ் கூறினார். இது மும்தாஜ், யஷிகா, ஜனனி உள்ளிடோருக்கு மகிழ்ச்சியை அளித்தது.

அதை தக்கவைத்துக்கொள்ள, மும்தாஜ் முட்டியில் சுளுக்கு ஏற்பட்டது போல நடித்தார். ஆனால் அதை நடிப்பு தான் என்று கண்டுபிடித்துவிட்ட ப்ளூ டீ ஷர்ட் அணி, மும்தாஜை கலாய்த்து விட்டனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் மும்தாஜ் முட்டி வலி நடிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார். 

நிகழ்ச்சியின் இறுதியாக, திமுக தலைவர் கருணாநிதி காலாமன செய்தி போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிக்பாஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் போட்டியாளர்கள் அனைவரும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். 

பிறகு ஒருவன் பின் ஒருவராக, மு. கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். அப்போது பேசிய பாலாஜி, தமிழ் என்றால் கருப்பு கண்ணாடியும், மஞ்சள் துண்டும் தான் அனைவரது நினைவிற்கு வரும் என்று உருவக்கமாக தெரிவித்தார். 

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018