தகுதி அற்றவர்களுக்கு எதிர்க்கட்சி பதவி இல்லை: ராஜித

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைத்தமையே அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்க காரணமாக அமைந்தது.

மாறாக நாடாளுமன்றில் நெருக்கடிகளும், குழப்பங்களும் விளைவித்து, மக்களுக்கு செல்லவேண்டிய நமையை சென்றடையாதவாறு தடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“2015 ஆம் ஆண்டு பொது தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைக்கப் பெற்றமை காரணமாகவே எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார்.

இவர்கள் இன்று பாராளுமன்றத்தில் சிறந்த எதிர்கட்சியினராகவே செயற்படுகின்றனர் பல நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்ற காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது பங்காளிகள் அல்ல அவர்கள் சிறந்த எதிர்கட்சியினரே.

இப்பதவியை போராட்டங்களின் ஊடாக பொது எதிரணியினர் ஒரு போதும் பெற முடியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகரது தீர்மானத்திற்கு அரசாங்கத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.

Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019