படவாய்ப்புளை தடுக்கின்றனர் - ரம்யா நம்பீசன் குற்றச்சாட்டு

நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை மீண்டும் சேர்த்ததற்கு எதிராக மோகன்லாலை விமர்சனம் செய்ததால், தனக்கு படவாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை ரம்யா நம்பீசனுக்கு கூறியுள்ளார்.

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை கடுமையாக விமர்சித்த ரம்யா நம்பீசன், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். 

இது கேரள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்குகிறார்களாம்.

கேரளாவில் நடந்த வழக்கறிஞர்கள் சங்க கூட்டமொன்றில் பங்கேற்று பேசிய ரம்யா நம்பீசன் பேசும்போது, “நடிகை கடத்தல் வழக்கில் சிக்கியவரை நடிகர் சங்கத்தில் சேர்த்ததை எதிர்த்து நான் ராஜினாமா செய்ததால் எனக்கு பிரச்சினைகள் வருகின்றன. புதிய படங்களில் நடிக்க விடாமல் தடுக்கும் சூழ்நிலை இருக்கிறது. எனக்கு எதிராக தவறான வதந்திகளும் பரப்புகின்றனர்.

படப்பிடிப்பில் தொல்லை கொடுக்க கூடியவர் ரம்யா நம்பீசன் என்று அவதூறு பரப்பியும் பட வாய்ப்புகளை கிடைக்க விடாமல் செய்கிறார்கள்” என்றார். மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கும் மோகன்லால், அவருக்கு எதிராக செயல்படுவதாக ரம்யா நம்பீசன் மறைமுகமாக தாக்கி பேசியதாக கூறப்படுகிறது. 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018