நாகசாகி அணுகுண்டுத் தாக்குதலின் 73ஆவது ஆண்டு நினைவுதினம்


ஜப்பானில் நாகசாகி அணுகுண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் 73ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

உலகில் அணுகுண்டு தாக்குதலுக்குட்பட்ட நகரங்களில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் முதலாவதாகவும் நாகசாகி இரண்டாவது நகரமாகவும் காணப்படுகிறது. கடந்த 1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி அமெரிக்க போர் விமானத்தினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறித்த அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட அதே நாளில் மணி ஒலிக்கப்பட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தும் சடங்கு ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வருடம் நடத்தப்பட்ட நினைவுகூரல் நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் மற்றும் நாகசாகி மேயர் டொமிகிசா டவ் (tomihisa taue) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நாகசாகி நினைவுதினத்தில் முதன் முறையாக இம்முறைதான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்ரெஸ் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பேசிய குட்ரெஸ், முற்றுமுழுதாக அணுவாயுதமற்ற உலகினை உருவாக்குவதற்கு  உலக நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்

அதனைத் தொடர்ந்து பேசிய நாகசாகி மேயர், குட்டரசின் அழைப்பிற்கு ஜப்பான் உடன்பட வேண்டுமென ஜப்பான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஹிரோஷிமா நினைவு தினத்தில் அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த பான்கீ மூன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019