ஐ.நா.வின் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு பதில்!

வடகொரியாவில் இருந்து ஆடைகளை இறக்குமதி செய்ததாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது.

அமெரிக்காவின் தடைகளையும் மீறி வட கொரியாவில் இருந்து இலங்கை ஆடைகளை இறக்குமதி செய்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே, குறித்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

“கடந்த ஒக்டோபர் 2017 மற்றும் மார்ச் 2018 காலப்பகுதியில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரிய குடியரசிலிருந்து ஆடை இறக்குமதிகள் செய்யப்பட்டமை தொடர்பான செய்தி அறிக்கைகள் எமது அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இலங்கை தொடர்பில் வெளியான செய்தி அறிக்கையில் அடங்கிய தகவல்கள் தவறானவை என இந்த அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கையின் சர்வதேச கடமைகளை பாதுகாக்கும் விதத்தில் இலங்கை அரசாங்கமானது கொரிய ஜனநாயகக் குடியரசு தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களின் விதிகளுக்கு கட்டுப்படுகின்றது.

அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான உள்நாட்டு ஒழுங்குமுறைகள் தொடர்பான வர்த்தமானிகள் முறையே 06 அக்டோபர் 2017, 19 ஏப்ரல் 2018, மற்றும் 14 மே 2018 இல் வெளியிடப்பட்டுள்ளன. (குறிப்பு: அதிவிஷேட வர்த்தமானி இல. 2039/32, 2067/14 மற்றும் 2071/3)

அந்த தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபுணர் குழுவோடு இலங்கை ஒத்துழைக்கிறது. மேலும் அவ்வப்போது பாதுகாப்புச் சபையின் நிபுணர்களின் குழுவால் எழுப்பப்படும் கேள்விகளுக்கான பதில்களை வழங்குகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018