கலைஞர் கருணாநிதி அவர்களிற்கான இரங்கலுரை

இரண்டு தசாப்தங்களாக ஐந்து முறை முதலமைச்சராகவும்  பத்தொன்பது தடவைகள் ஏறத்தாழ அறுபது வருடங்கள் தமிழ்நாட்டுச் சட்ட சபை உறுப்பினராகவும் எழுபத்தைந்து வருடங்களிற்கு மேலாக தமிழ்நாட்டு அரசியலில் தடம்பதித்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர் முதலமைச்சராக இருந்த காலங்களில் அவரதுசெயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க விளைவுகளில் ஒன்று இந்திய மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில்முன்னிலையில் இன்று தமிழ்நாடு இருப்பது.

அரசியலிற்கு அப்பால் தமிழிற்கும்  தமிழ் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிய பணி அளப்பரியது.அவர் எழுதிய நூல்களில் என்னை மிகவும் கவர்ந்தவை “சங்கத் தமிழ்”ரூபவ் “முத்துக் குளியல் - இரண்டு பாகங்கள்” “தொல்காப்பியப் பூங்கா” ஆகிய நூல்கள் ஆகும். சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில்; பொதிந்திருக்கும்விடயங்களை இலகு தமிழிலும்  அழகு தமிழிலும் இலக்கியச் சுவையுடனும் இந் நூல்கள் எடுத்தியம்புகின்றன.

இவரால் எழுதப்பட்ட “நெஞ்சிற்கு நீதி” என்ற நூலைப் படித்தவர்களது நெஞ்சினைத் தொட்ட நூலாக அது என்றும்நிலைத்து நிற்கும். “குறள் ஓவியம்” என்ற நூலை எழுதியமை மட்டுமல்லாது வள்ளுவர் புகழை உலகறியச் செய்யும்வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தினையும்  கன்னியாகுமரியில் 133 அடி உயரமான வள்ளுவர்சிலையையும் அமைத்து அதன் மூலம் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்.

ஆயிரம் ஆயிரம் தமிழ்நாட்டு மக்களின் கண்ணீரில் சங்கமமாகி பேரறிஞர் அண்ணாவின் சமாதி அருகேமீளாத்துயிலடைந்திருக்கும் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினார் கழகத் தொண்டர்கள் மற்றும்தோழர்களிற்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


சி. தவராசா

எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு மாகாண சபை

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018