கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி

மறைந்த தி.மு.க. தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இவ்வாறு அஞ்சலி செலுத்தி, அவர் தொடர்பான உரையொன்றையும் ஆற்றியுள்ளார்.

சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தின் போது, இவ்வாறு கருணாநிதிக்குக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றியதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பு செய்த மலையக மக்கள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக திருப்பி அனுப்பப்பட்ட போது, அவர்களை வரவேற்று இந்தியாவில் மறுவாழ்வளித்த விடயத்தில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு என்று இதன்போது குறிப்பிட்டார்.

கடலில் துடித்துக்கொண்டிருந்த மீனை வெளியில் தூக்கி எறிந்ததைப் போன்ற நிலை இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு ஏற்பட்டது. அந்தவகையில் அவர்களுக்கு கரம் கொடுத்த பெருமை கலைஞரையே சாருமென திலகராஜ் குறிப்பிட்டார்.

அதுமட்டுமன்றி கலைத்துறைக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019