நல்லாட்சி பிழைத்துக்கொள்வதற்கான ஆட்சி:செந்தில்வேல்!

நல்லாட்சி அரசாங்கத்தில் தெற்கிலும் வடக்கிலுமுள்ள மேற்தட்டு அரசியல்வாதிகள் பிழைத்துக்கொண்டதனை தவிர நாட்டு மக்களுக்கு எதணை செய்ததென புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் கா. செந்திவேல் கேள்வி எழுப்பியிருந்தார்.

புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

அங்கு கட்சியின் பொதுச்செயலாளர் சீ.கா. செந்திவேல் கருத்து தெரிவிக்கையில் ஜரோப்பியர்களுக்கு அடி பணிந்து அவர்களுக்கு செவை செய்து தங்களை வளர்த்து தங்களை சக்தி மிக்கவர்களாக வளர்த்து கொண்டு நிலத்ததலும் சொத்தாலும் பணத்தாலும் பதவிகளாளும் தங்களை அலங்கரித்து மேல் நிலையில் இருந்தார்கள் அவர்களுடைய வாரிசுகள் தான் ஆட்சி அதிகாரத்தில் இன்றும் தொடர்ந்து இருக்கின்றதை காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் தரப்பில் தமிழ் மக்களை எடுத்து கொண்டால் ஆளும் வா.;க்கத்திற்கு உதவியாக இருந்தவர்கள்  தொடர்ந்தும் இருந்து வருகிறார்கள். தங்கள் அளவில் இன்று ஆதிக்க அரசியலை தான் அவர்கள் கொண்டு நடத்துகிறார்கள். ஆதிக்க நிலை அரசியல் என சொல்லும் போது  அடி நிலையில் உள்ள மக்களை  அதாவது அடிமட்ட கூலி தொழில் செய்வர்கள்,  விவசாயிகள் , மீனவர்கள், சாதியத்தினால் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல் அவர்களுடைய வாக்குகளை மட்டும் வாங்கி சென்று பாரளுமன்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டு இருக்க கூடிய ஒ|ரு நிலை தான் தொடர்ந்து வந்திருக்கிறது. அது சேர் பொன் இராமநாதன், ஜீஜீ பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்மலிங்கம் வரை இன்று அதே பாதையில் தான் சம்மந்தன், மாவை சோனாதிராஜா, சுமந்திரன் ஆக்கள் பயணித்து கொண்டிருப்பததை காணக்ககூடியதாக உள்ளது.

இலங்கையில் அடிப்படை பொருளாதரார நிலைமை சீர் குலைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. அன்னிய நாட்டின் மூலதனங்கள் எங்களுடைய நாட்டிக்குள் வரவழைக்கப்பட்டு மூலதனங்களும் மூலதனங்களுடைய வளங்களுமும் சூறையாடப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்று ஜரோப்பா அமெரிக்கா இந்தியா தற்போது புதிதாக சீனாவும் இணைந்திருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

எனவே இவர்களுடைய வளச்சுரண்டல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர்களுடை ஆதிக்கம் எங்களுடைய நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தங்களுடைய பொருளதார நலன்களுக்கும் தங்களுடைய அரசியல் சக்திக்கும் ஏற்ற வகையில் ஊறு விளைவிக்கும் அரசியல் நடத்தவேண்டும் என்பது வல்லரசு நாடுகளின் எதிர்பார்ப்பு  ஆகும். அது தான் இப்பொழுதும் நடைபெறுகிறது.

இந்த அரசாங்கம் எதை சொல்லி பதவிக்கு வந்ததது என்று சொன்னால் நல்லாட்சியினை கொண்டு வருவோம், ஊழல் அற்ற ஆட்சியினை கொண்டு வருவோம், சட்ட ஆட்சியினை கொண்டு வருவோம். இந்த நாட்டிலே நீதித்துறை சட்டத்துறை அணைத்தையும் சுயாதீனமான முறையில் கொண்டு நடத்துவோம் என கூறி ஆட்சிக்ககு வந்தவர்கள்.

மிகப்பெரிய வாக்குறுதியினை நாட்டு மக்களுக்கு வழங்கிய இந்த அரசாங்கம் ஊழலை ஒழிப்போம், கடந்த கால ஊழல் சக்திகளை வெளிப்படுத்துவோம், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் தண்டனை வழங்குவோம் என சொன்னார்கள்.

ஆனால் இன்று வரை எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்,? இந்த ஊழல் என்பது அரசாங்கத்தில் மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் மாகாணசபை உறுப்பினர்கள் வரை ஏன் அது உள்ளுராட்சி சபைகள் வரை உலகமயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Ninaivil

அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019
செல்வி ஜெசி ஜெகசீலன்
செல்வி ஜெசி ஜெகசீலன்
இங்கிலாந்து
Bristol
16 APR 2019
Pub.Date: May 10, 2019