கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி - கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி அறிவிப்பு

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால்  கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக 22-பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கேரளாவில், கனமழை பெய்துவரும் இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கோரப்பட்டுள்ளது. மிகப்பெரிய அணையான இடுக்கி அணை திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், மழையால் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மழை வெள்ள நிவாரணங்களுக்காக அம்மாநிலத்துக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும். மேலும் கேரளா மாநிலத்துக்கு தேவையான நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018