கண்டி வன்முறை பாதிப்புகளுக்கு 18 மில்லியன் நஷ்டஈடு வழங்கியிருக்கின்றோம்


கண்டி வன்­மு­றை­யினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஏற்­க­னவே 18 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈடு வழங்­கி­யுள்ளோம். மிகுதி தொகையை வழங்­கு­வ­தற்­கான மதிப்­பீடு செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இதன்­படி பூரண நஷ்­ட­ஈ­டாக 205 மில்­லியன் ரூபாவை மதிப்­பிட்­டுள்ளோம். ஆகவே மிகுதி நஷ்­ட­ஈட்டுத் தொகையை விரைவில் வழங்­குவோம். அதற்­கான திக­தியை விரைவில் அறி­விப்பேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

அத்­துடன் சொத்­து­ட­மை­க­ளுக்­கான சான்­றுகள் தீயில் எரிந்­துள்­ள­மை­யினால் அது தொடர்­பி­லான மதிப்­பீ­டுகள் செய்­வது குறித்து ஆராய்­வ­தற்கு மீண்டும் விசேட பேச்­சு­வார்த்­தை­யொன்றை நடத்தி முடி­வொன்றை எடுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை  கேள்வி நேரத்தின் போது கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது வேலு­குமார் எம்.பி.கேள்வி எழுப்பும்போது,

கண்டி வன்­மு­றை­யினால் அதி­க­ள­வி­லான மக்கள் பாதிக்­கப்­பட்­டனர். இதனால் அதி­க­ள­வி­லான வர்த்­தக நிலை­யங்கள் சேதத்­துக்கு உள்­ளா­கின. ஆகவே பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈடு எப்­போது வழங்­கப்­படும்? அதற்­கான திக­தியை அறி­விக்க முடி­யுமா? என்றார்.

இத­னை­ய­டுத்து பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

கடந்த மே மாத­ம­ளவில் கண்­டியில் ஏற்­பட்ட வன்­மு­றை­யினால் 11 பிர­தேச செய­ல­கங்­களில் அதி­க­ளவில் சொத்­து­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டது. இந்த வன்­மு­றை­யினால் 20மத ஸ்தலங்கள்,  297வீடுகள், 223வர்த்­தக நிலை­யங்கள், 65 வாக­னங்­களும் சேத­ம­டைந்­தன.

இதன்­படி சேத­ம­டைந்த சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­காக 205 மில்­லியன் ரூபா மதிப்­பீடு செய்­துள்ளோம். இந்த மதிப்­பீட்டுத் தொகை­யையே நஷ்­ட­ஈ­டாக வழங்கத் திட்­ட­மிட்­டுள்ளோம்.

அதே­போன்று கடந்த ஜூலை மாதம் 31ஆம் திக­தி­யன்று 18 மில்­லியன் ரூபா நஷ்­ட­ஈ­டாக வழங்­கி­யுள்ளோம். இதன்­படி அடுத்த தொகை நஷ்­ட­ஈட்­டுக்­கான மதிப்­பீட்டுப் பணிகள் நிறை­வ­டைந்­த­வுடன் விரைவில் வழங்­குவோம். அதற்­கான திக­தியை விரைவில் அறி­விப்பேன் என்றார்.

இதன்­போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கூறும்­போது,

மதிப்­பீ­டுகள் செய்­யப்­பட்­டாலும் பாதிக்­கப்­பட்ட பெரும்­பா­லா­ன­வர்­க­ளிடம் சொத்து உரிமை தொடர்­பான எந்­த­வொரு சான்­று­களும் இல்லை. அனைத்து சான்­று­களும் தீயினால் எரிந்து நாச­மா­கி­விட்­டன. ஆகவே இது தொடர்பில் மதிப்­பீ­டொன்று செய்யும் முன்னர் கலந்துரையாட வேண்டும் என்றார்.

இதனையடுத்து பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

மதிப்பீடு தொடர்பாக ஆராய்வதற்கு விரைவில் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்துவேன். அதன்போது இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பேன் என்றார்.

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019