அமைச்சரவைக் குழப்பத்தால் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகள் முடக்கம்!

வடக்கு மாகாண அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினால் அமைச்சரவை நடவடிக்கைகளும், சபை நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண சபையின் 129வது அமர்வு நேற்று வியாழக்கிழமை யாழ். கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் அவை தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் யார் எனபது தொடர்பில் அண்மைக் காலமாக எழுந்துள்ள சர்ச்சைகளினால் மாகாண அமைச்சுக்குட்பட்ட விடயங்களை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாண அமைச்சர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சி தலைவர் சின்னதுரை தவராசா கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பில் உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. குறித்த வாத பிரதிவாதம் இடம்பெறும் போது முதலமைச்சர் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. அதனை தொடர்ந்து முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய நான்கு பேரையும் அமைச்சர்கள் என குறிக்கும் பெயர் பலகை அகற்றப்பட்டிருந்தது. இது குறித்து முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் சில நிபந்தனைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் என கோரினார்.

இந்த விடயத்தில் இனியும் காலம் தாழ்த்தாது வடக்கு மாகாண முதலமைச்சர் உரிய ஆலோசனைகளை பெற்று ஆளுநர் ஊடாக இந்தப்பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளும் தரப்பினரால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை தலைவரினால் அது வாசிக்கப்பட்டது.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018