இலங்கை ஆண்கள் ஹொக்கி அணி ஆசிய விளையாட்டில் சாதிக்குமா

உலகிற்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட துடிப்புடன் காத்திருக்கும் இலங்கை ஆடவர் ஹொக்கி அணிக்கு இவ்வருடம் திருப்புமுனையான வருடமாக அமையுமா? என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான, 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழா, எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 03ஆம் திகதிவரை ஜகார்த்தா – பாலெம்பேக் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள இலங்கை ஆடவர் ஹொக்கி அணி, நாட்டின் நாமத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

ஹொக்கி விளையாட்டானது இலங்கையின் பலத்தை நிரூபிக்கும் மற்றுமொரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. உலக தரப்படுத்தலில் இலங்கை ஹொக்கி அணி மெதுவாக முன்னேறி வந்தாலும், வீரர்களின் குறிக்கோள் ஒன்றும் அவ்வளவு சிறிதாக போய்விடவில்லை.

கடந்த இரண்டு வருடங்களில் உலக ஹொக்கி தரப்படுத்தலில் 43ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, 38ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன், ஆசிய தரப்படுத்தலில் 9ஆவது இடத்தையும், தெற்காசிய தரப்படுத்தலில் 4ஆவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளது.

கடந்த 2016/17 ஆண்டு உலகக் கிண்ண ஹொக்கி தொடருக்கு அறிமுகமாகியிருந்த இலங்கை, தங்களது குழுநிலைப் போட்டியில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. எனினும், அதற்கு மேல் இலங்கை அணியால் முன்னேறக்கூடிய சந்தரப்பங்கள் இருக்கவில்லை.

இந்த நிலையில் இம்முறை ஆசிய கிண்ணத்தில் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர் அனுருத்த ஹேரத் பண்டாரவின் பயிற்றுவிப்பின் கீழ், 18 பேர்கொண்ட குழாம் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கிறது. நாடுமுழுதும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 18 பேரில் 11 பேர் ஹொக்கி விளையாட்டை பிரபலமாக கொண்ட மாத்தளை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லஹிரு வீரசூரியவும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணி பி குழுவில் இடம்பிடித்துள்ளது. பலம் மிக்க இந்தியா, தென்கொரியா, ஹொங்கொங் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை குழுநிலைப் போட்டிகளில் மோதவுள்ளது. ஏ குழுவில் மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணி, அனுபவம் குறைந்த அணியல்ல.

குழாத்தில் இசாங்க ஜயசுந்தர, ஹரேந்திர தர்மரத்ன, நாலந்த டி சில்வா, சந்தருவான் பிரியலங்க, மதுரங்க விஜேசிங்க, தரிந்து ஹெந்தெனிய மற்றும் தம்மிக்க ரணசிங்க ஆகியோர் 50 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். குழாத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் மூன்று புதுமுக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் அனுபவம் மற்றும் துடிப்பான இளம் வீரர்கள் அணியின் வெற்றிகளுக்கு அதிக பலத்தைச் சேர்ப்பார்கள் என அணி வீரர்கள் நம்புகின்றனர்.

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு, ஆசிய தரப்படுத்தலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறுவதற்கான குறிக்கோளுடன் களமிறங்கவுள்ளது. அதிலும் 5-7 இடங்களுக்கு அணியால் முன்னேற முடியுமாயின், அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.

அணி விபரம்

லஹிரு வீரசூரிய (தலைவர்), மதுரங்க விஜேசிங்க, சந்தருவான் பியலங்க, தரங்க குணவர்தன, நாலந்த டி சில்வா, எம்.ஜி.சன்ஜீவ, ராஜித குலதுங்க, உதயசான் பெர்னாண்டோ, சமல்க ருக்ஷான், விபுல் தனுஷ்க, அனுருந்த சுரேஷ், தரிந்து ஹேந்தெனிய, தம்மிக்க ரணசிங்க, ஹரேந்திர தர்மரத்ன, இசாங்க ஜயசுந்தர, செரான் நிமங்க, கிஹான் சங்கீத்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019