கேரளாவில் வரலாறு காணாத கனமழை: 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளாவில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் மழை ஆறுபோல் பெருக்கெடுத்து பாய்கிறது.

வரலாற்றில் முதன்முறையாக இடுக்கி அணையின் ஒருபகுதியான செறுதோணி அணையில் உள்ள 5 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கனமழையில் கேரளாவில் உள்ள 24 அணைகள் நிரம்பிவிட்டன. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் வெள்ளத்தில் வீடுகள் அடித்து சென்றதில் ஒரு சிறுமியையும், மற்றொரு இளைஞரையும் காணவில்லை.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தோர் மற்றும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்த 10 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் இருந்து இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவில் மழைக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 48 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019