பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது முறையல்ல: அன்புமணி குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலையை இந்தியாவில் யாருமே எதிர்க்கவில்லை. மத்திய அரசு மட்டும்  விடுதலைக்கு எதிராக பிடிவாதம் பிடிப்பது முறையல்ல என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் மிகவும் தவறாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7  தமிழர்களையும் விடுதலை செய்ய முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாடு மிகவும் தவறானது. ராஜிவ் கொலைக்கும், 7  தமிழர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் உண்மையாகும்.

ராஜிவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை  தயாரித்துக் கொடுத்தது யார் என்பதை சிபிஐயால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பாவிகளை 28 ஆண்டுகளுக்கு மேலாக  சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துவது  எந்த வகையிலும் ஏற்க முடியாததாகும். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவதை இந்தியாவில் யாருமே எதிர்க்கவில்லை. வழக்கை புலனாய்வு செய்த  அதிகாரிகள், விசாரித்த நீதிபதிகள் என அனைத்துத் தரப்பினரும் 7 தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், மத்திய  அரசு மட்டும் விடுதலைக்கு எதிராக பிடிவாதம் பிடிப்பது முறையல்ல.

எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் 7 பேரை  விடுதலை செய்ய மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Ninaivil

திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019
திருமதி பரமேஸ்வரி முத்தையா
திருமதி பரமேஸ்வரி முத்தையா
யாழ்.அல்வாய்
கனடா
09 JAN 2019
Pub.Date: January 10, 2019
திரு மயிலு சின்னையா
திரு மயிலு சின்னையா
யாழ். ஆனைக்கோட்டை
யாழ். ஆனைக்கோட்டை
09 JAN 2019
Pub.Date: January 9, 2019