வருகிற தேர்தலில் தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம்- தமிழிசை

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பா. ஜனதா கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

மிக மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி மறைவால் அரசியல் வெற்றிடத்தை வைத்து அரசியல் ஆதாயத்தை தேட வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை.

அரசியலையும் கடந்து முதுபெரும் தலைவர் என்ற நிலையில் அவருக்கு உரிய மரியாதையை மத்திய அரசு செய்தது. இது எங்கள் அரசியல் பண்பாடு.

எங்களை பொறுத்தவரை தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும். அதற்காக கட்சியை குக்கிராமங்கள் வரை பலப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.

வருகிற தேர்தலில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழகத்தில் தொடர்ந்து வரும் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.மத்தியில் ஆளும் மோடி அரசு மீது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. எனவே மக்களின் ஆதரவு பா.ஜனதா பக்கம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை சேத பாதிப்புகளுக்கு உதவுவதற்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம். இந்த குழுவினர் கேரள மக்களுக்கு உதவுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019