அழகான ஆபத்து - மும்பை கடற்கரைகளில் ஜெல்லி மீன்கள் தாக்குதலில் 150 பேர் காயம்

மும்பை கடற்கரைகளில் ப்ளூ பாட்டில் ஜெல்லி மீன்கள் அதிக அளவில் கரை ஒதுங்குவதால், கடற்கரையில் பொழுது போக்குவதற்காக வந்த சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 150 பேர் காயமடைந்தனர்.

பொதுவாக ஆழ்கடலில் காணப்படும் ப்ளூ பாட்டில் ஜெல்லி மீன்கள், அரிதாகவே கடற்கரைகளுக்கு வரும். இந்த மீன்கள் தாக்கினால் மனிதர்களுக்கு கடுமையான சொறி, ஒவ்வாமை, தோல் அரிப்பு போன்றவை ஏற்பட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக மும்பை கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி உள்ளன. கடலில் குளித்தவர்கள் இந்த மீன்களின் தாக்குதலில் சிக்கி உள்ளனர். இந்த மீன்களால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி அறியாத சிலர்,  கடற்கரையில் ஒதுங்கிய  மீன்களைத் தொட்டு விளையாடி உள்ளனர்.

இதனால் அவர்களுக்கும் ஒவ்வாமை, அரிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.ஜுகு, அக்சா, கிர்கான் கடற்கரையில் இதுபோன்ற ஜெல்லி மீன்கள் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபற்றி காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் மும்பை கடற்கரைக்கு ஜெல்லி மீன்களின் வருகை வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த முறை அதிகமான அளவு ஜெல்லி மீன்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளாவிய அளவில் வெப்பநிலை அதிகரித்திருப்பதால் இத்தகைய மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கடல் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018