நீதியை நிலைநாட்ட சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறை அவசியம்

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34 ஆம் அமர்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இன்று அன்று ஆற்றிய உரை

ஐ.நா. மனித  உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஃ1 இலக்க தீர்மானமானது நிறைவேற்றப்பட்டவேளை, அத்தீர்மானமானது குற்றவியல் விசாரணையொன்றை கோரியிருந்த போதிலும்,  இலங்கை மீதான ஐ.நா.அலுவலக விசாரணை அறிக்கையில் (இலங்கை தொடர்பில்) குறிப்பிடப்பட்டிருந்த  முக்கியமான குறைபாடுகள் குறித்துஆழமான கவனத்தை அந்த தீர்மானம்  செலுத்தியிருக்கவில்லை என நாம் அன்று நிறைவேற்றப்பட்டபோதே எச்சரித்திருந்தோம்.

நடைமுறை அர்த்தத்தில் வெறுமனே ஒருஉள்ளகப் பொறிமுறையாகவே இருக்கப்போகின்ற செயன்முறை, நம்பகத்தன்மையானது எனும் வெளித்தோற்றப்பாட்டைக் காட்டுவதற்காக மட்டும், 'வெளிநாட்டு' ஈடுபாட்டை , அந்த 30ஃ1 தீர்மானம் கோரி நின்றது என்பதையும் நாம் அப்போதே வெளிப்படுத்தியிருந்தோம்.

அத்தோடு, நீதியை வழங்குவதற்கான அரசியல் விருப்பானது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறவே இல்லை என்பதையும் நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இந்நிலையில், 2015 மனித உரிமைப பேரவை தீர்மானத்தில் கூறப்பட்டிருந்த ஆகக் குறைந்த கடப்பாடுகளிலிருந்தும் கூட, சிறிலங்கா அரசாங்கமானது, உத்தியோக பூர்வமாகவே, விலகி நிற்கின்றது.

இவ்வாறு, ஐ.நா.மனித உரிமை பேரவைத் தீர்மானத்தின் கடப்பாடுகளிலிருந்து சிறிலங்காவை, விலகியிருக்கச் செய்யும் முயற்சிகள், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப்படி நிலையில் உச்சத்தில் இருக்கின்ற ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் தலைமையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.தீர்மானத்தின் கடப்பாடுகளை வாய்மொழி மூலமாக நிராகரிப்பது மாத்திரமன்றி, அவற்றில சொல்லப்பட்ட ஒன்றைத்தானும், இதுவரை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பதே இங்கு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். 

இவ்வாறாக, ஐ.நா.தீர்மானத்தை மிகத் தெளிவாக நிராகரித்து, அது தம்மை கட்டுப்படுத்தவே மாட்டாது என ஒரு அரசாங்கம் கூறும்போது, அந்த அரசாங்கத்துக்கு,மேலதிக கால அவகாசம் கொடுப்பதென்பது, பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் , ஐ.நா.மனித உரிமை பேரவையின் மீதான நம்பகத்தன்மையை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கும்.

இந்நிலையில், சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது அல்லது ஒரு விசேட தீர்ப்பாயம் ஒன்றை அமைத்து விசாரிப்பது போன்ற பக்கசார்பற்ற  சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக மட்டுமே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை நிலை நாட்டமுடியும் எனநாம் மீளவும் வலியுறுத்திக்கூற விரும்புகிறோம்.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019