அபிவிருத்தியின் வடிவில் ஆதிக்கமும் இன அழிப்பிற்கான அபிவிருத்தியும்; மு.திருநாவுக்கரசு

தமிழ்மக்களுக்கு வேண்டியது அபிவிருத்திக்கான அரசியல் அதிகாரமே தவிர இனவழிப்பிற்கான சிங்கள ஆட்சியாளரின் அபிவிருத்தி அல்ல.

இயற்கையை கற்பழிக்காமல் இயற்கையோடு இணைந்து இயற்கைக்கும் எமக்கும் இடையே இசைவாக்கத்தை ஏற்படுத்தி அதன் வாயிலாக அடையும் வளர்ச்சியையே அபிவிருத்தி என்று சொல்லலாம்.

இனவழிப்பை செய்வதற்கான ஒரு மார்க்கமாய் பொருளாதார ஏற்பாட்டின் வாயிலாக தமிழினத்தை சிங்களமயமாக்கவல்ல ஆதிக்க அபிவிருத்தியை முற்றிலும் நிராகரித்து ஆகவேண்டும்.

நாம் அபிவிருத்தியை விரும்புகிறோம்.0 அதை எமக்கு பொருத்தமான வகையில் நாம்தான் செய்யவேண்டும். அத்தகைய அபிவிருத்தியை நாமே மேற்கொள்வதற்கான அரசியல் அதிகாரத்தையே நாம் கோரிநிற்கிறோம்.

எங்களுக்கான அபிவிருத்தியை எங்களின் கையில் விடுங்கள். அதை நீங்கள் சுமக்கவேண்டியதில்லை. நீங்கள் உங்களின் சிங்கள மயமாக்கல் என்ற சப்பாத்துக்கு பொருத்தமாக எங்களின் கால்களை வெட்டுவதற்கு அபிவிருத்தி என்ற கூரிய கத்தியை நீட்டுகிறீர்கள்.

எங்களின் கால்களுக்கு பொருத்தமான சப்பாத்தை எங்களுக்கு விருப்பமான வடிவில் நாங்களே தைத்துக்கொள்வோம். எனவே எங்களை இனவழிப்பு செய்யவல்ல உங்களின் அபிவிருத்தி எமக்கு வேண்டாம். எங்களினதும் எங்கள் சந்ததியினரதும் ஆக்கத்திறன்களை எமது பண்பாட்டிற்கு இசைவாக வளர்க்கவல்ல அபிவிருத்தி எது எனதீர்மானிப்பதற்கான அரசியல் அதிகாரமே எமக்கு வேண்டும்.

சூழலோடும்,பண்பாட்டோடும், வாழ்கை முறையோடும் பொருந்தவல்ல வளர்ச்சியைத்தான் அபிவிருத்தி என கூறுகிறோம். uneven development எமக்கு வேண்டாம். தலை பெருத்து கால் சூம்புகின்ற, மூக்கு பெருத்து வாய் மறைகின்ற, வயிறு பெருத்து கை குறுகுகின்ற சமச்சீரற்ற வளர்ச்சி எமக்கு வேண்டாம். சிங்கள இனவாதம் கொழுத்து தமிழினம் சுருங்குவதற்கான உங்களின் அபிவிருத்தி எமக்கு வேண்டாம்.

பொருளாதார வளர்ச்சி என்பதன் பெயரில் பொருந்தாத வளர்ச்சியை எமக்கு பாதகமானதும் இனவழிப்புக்கு ஏதுவானதுமான கூரிய பொருளாதார கத்தியை அபிவிருத்தி என்பதன் பெயரில் ஒருபோதும் ஏற்கமுடியாது.

நாங்கள் உங்களிடம் உதவி கேட்டால் அதை நீங்கள் செய்யலாம். அதே போல உங்களுக்கு நாங்களும் உதவலாம். ஆனால் எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீங்கள் அல்ல. எமக்கு வேண்டியது எமக்கு பொருத்தமான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான அரசியல் அதிகாரம்.

அனைத்துமே அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. அன்புக் காதலும் அரசியலுக்கு கீழ்பட்டது. பிள்ளை பிரசவமும் அரசியலுக்கு கீழ்ப்பட்டது. கருப்பையும் அரசியலுக்கு கீழ்பட்டது. புதைகுழியும் அரசியலுக்கு கீழ்பட்டது. அப்படியே அபிவிருத்தியும் அரசியலுக்கு கீழ்பட்டது.

அரசியல் என்பது அதிகாரமாகும். அரசு என்பது ஆயுதம் தாங்கிய அதிகார பீடமாகும். அரசாங்கம் என்பது அதிகார கட்டமைப்பை நிர்வகிக்கும் கருவியாகும். எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நீங்கள் அபிவிருத்தியை ஒரு கூரிய வாளாய் கையில் ஏந்துகிறீர்கள். அதை நாங்கள் வெறுக்கிறோம். மொத்தத்தில் எல்லா வகையான ஆதிக்கங்களுக்கும் எதிராக நாம் போராடுகிறோம். ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும் அதை நிராகரிப்போம், ஆதிக்கம் இராணுவ வடிவில் வந்தாலும் நிராகரிப்போம், ஆதிக்கம் பொருளாதார வளர்ச்சி என்ற வடிவில் வந்தாலும் நிராகரிப்போம். அது தர்மம் என்ற பெயரில் வந்தாலும் நிராகரிப்போம். மற்றும் தானம், கருனை என்ற வடிவில் வந்தாலும் நிராகரிப்போம்.

எமக்கு வேண்டியது உங்களது ஆதிக்கத்திற்கு ஏதுவான அபிவிருத்தி அல்ல; எங்களின் வளர்ச்சிக்கு பொருத்தமான அபிவிருத்தியை நாமே மேற்கொள்வதற்கான அரசியல் அதிகாரமே.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018