நிதியமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் விசம்கலந்த பால் பக்கெட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன : மஹிந்த புது தகவல்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விசம் கலந்த அந்த பால் பக்கெட்டுக்கள் எங்கிருந்து வந்தன, எப்படி பகிர்ந்தளிக்கப்பட்டன, எந்த வாகனத்தில் கொண்டுவரப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்கள் தற்போது எம் அனைவருக்கும் தெரியவந்துள்ளன என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த பால் பக்கெட்டுகள் நிதியமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

கடந்த கால ஊழல் மோசடி குறித்த விசாரணைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) கோத்தபாய உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகியிருந்தார்.

அதேநேரம், இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷ பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிரணியின் உறுப்பினர்களும் வருகைத் தந்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாம் இவ்வாறான கீழ்த்தரமான வேலைகளை செய்வதில்லை. தற்போதுதான் அந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.

எமது பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இன்னும் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார். ஆர்ப்பாட்டம் இடம்பெற்று பல நாட்கள் கடந்தும் சிலருக்கு இன்னும் உடல் நிலைமை மோசமாகவே இருக்கிறது.

அந்த பால் பக்கெட் நிறுவனம் ஒரு அரச நிறுவனமாகும். இதனை பகிர்ந்தளித்த வாகனம் நிதியமைச்சுக்கு சொந்தமானதாகும். இவையணைத்தும் தற்போது வெளியில் வந்துள்ளது“ என தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018