ஶ்ரீலங்கா பொலிசாரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட 14 வயது மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில், நீதி வேண்டி இன்று காலை 7.30க்கு கவனயீர்ப்பு போராட்டம்..!

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில், கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுமியின் தாயார்,

எனது கணவருடன் தாவூத் ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர்  பொலிசாரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து எனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்தார். இதன்போது எனது கணவர் எமது காணி வேலியருகில் சென்ற போது அங்கு சிவில் உடையில் பொலிஸ் வாகனத்தில் வந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனது கணவரை கடுமையாக தாக்கினார். 

இதை அவதானித்து தடுக்க சென்ற பாடசாலையில் எனது மகனையும் கழுத்தை நெரித்து தாக்கினார். இச்சம்பவத்தை அவதானித்த  நான் கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது என்னையும் தள்ளி விழுத்தி கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கினார். இதன்போது நான் அணிந்திருந்த சட்டை பொலிசாரால் கிழிக்கப்பட்டுள்ளது. 

என்னை பொலிசார் தாக்குவதைக் கண்ட கனகராயன் குளத்தில் கல்விகற்கும் எனது மகள் தடுக்க முற்பட்ட போது அவளது வயிற்றில் எட்டி உதைந்து பொலிசார் தாக்கியதில் எனது மகள் வயிற்று வலியால் துடித்து தற்போது இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து எனது கணவரையும், வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவரையும் கனகராயன்குளம் பொலிசார் கைது செய்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் எனது கணவர் பே.வசந்தகுமார் (வயது 42) பொலிசாரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

பிள்ளைகளான கிருபாகரன் (வயது 16), சர்மிளா (வயது 14) ஆகியோர் பொலிசாரின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நான் மாங்குளம் பொலிசில் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போது அவர்கள் நீண்ட நேரம் இழுதடித்துடித்து விட்டு முறைப்பாட்டை பதிவு செய்யாது திருப்பி அனுப்பினர். 

இதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் அதிகாலை 1.30 மணியளவில் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுடன், வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளேன். 

கனகராயன்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிரான முறைப்பாடு என்பதால் தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என பொலிசார் இழுத்தடிக்கின்றனர்

இவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வலியுறுத்தியும், மாணவர்களை பாதுகாக்க வேண்டிய பொலிசாரே வன்முறையை கையில் எடுத்துள்ளமையை  கண்டிக்கும் வகையிலும் கனகராயன்குள பிரதேச வர்த்தகர்கள் , மாணவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாளை காலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு முன்னால் ஒழுங்கு செய்துள்ளனர். 

எனவே  நாளை காலை கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்னால் சகல அரசியல் கட்சிகளையும், பொதுமக்கள், மாணவர்கள், வர்த்தகர்கள் சமூக நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்களை யும் ஒன்றிணையுமாறு பகிரங்க வேண்டுகோளை பிரதேச வர்த்தகர்கள் , மாணவர்கள் விடுத்துள்ளனர்.

இன்று எமது ஊரில் - நாளை எமது வீட்டில் என்பதை உணர்ந்து ஒன்றிணையுங்கள்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018