உறவுகள் மீண்டும் பலப்படுவதை வெளிப்படுத்தும் மகிந்தவின் விஜயம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்தியாவிற்கான விஜயம் இந்திய அரசாங்கத்துடனான அவரது உறவுகள் மீண்டும் நெருக்கமடைவதை புலப்படுத்துகின்றது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

2006 முதல் 2009 வரை மேற்கொள்ளப்பட்ட இராணுவநடவடிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகளின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் என கருதப்படும் மகிந்த ராஜபக்ச சுப்பிரமணியம் சுவாமியின் தலைமையிலான விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என அழைக்கப்படும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் இந்திய இலங்கை உறவுகள் குறித்து உரையாற்றவுள்ளார் என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச இந்திய பிரதமர் பாதுகாப்பு ஆலோசகர் காங்கிரஸின் முன்னாள் தலைவி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் என தெரிவித்துள்ள இந்து இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சந்திப்புகள் குறித்துஇதுவரை  எதனையும் தெரிவிக்கவில்லை இவை தனிப்பட்ட சந்திப்புகளாக அமையலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு அவருடன் சென்றுள்ள மகன் நாமல் ராஜபக்சவை அரசியலில் வளர்த்தெடுப்பதற்கான  நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என  கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பின்னணியை ராஜபக்ச தரப்பினர் முன்னெடுத்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள இந்து நாளிதழ் மகிந்த ராஜபக்ச தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச மூன்று வருடங்களாக ஆட்சியில் இல்லாதபோதிலும் தொடர்ந்தும் வலுவான சக்தியாக விளங்குகின்றார் பிளவுபட்டுள்ள அரசாங்கத்திற்கு அடிக்கடி சவால் விடுக்கின்றார் எனவும் இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

Ninaivil

திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
வவுனியா
சுவிஸ்
7 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 12, 2018
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
யாழ். கட்டுவன்
கனடா
10 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 11, 2018