வடக்கு, கிழக்கிலுள்ள முக்கிய இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படும்

வடக்கு, கிழக்கில் மூலோபாய ரீதியில் முக்கியமான இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்படும். தேசிய பாதுகாப்பு தொடர்பில் முப்படையினர் எடுக்கும் தீர்மானங்களை சிலர் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எப்பொழுதும் விசேட காரணியாகக் கருதியே வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துவருகிறது என்றும் பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக சிலர் கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் குறுகிய அரசியல் லாபம் தேடுவதற்கு குழுவொன்று முயற்சித்து வருகிறது. இந்த முயற்சியை வன்மையாகக் கண்டிப்பதுடன், தேசிய பாதுகாப்புத் தொடர்பில் பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதற்கும் அக்குழு முயற்சிக்கிறது.

இதனால் முப்படையினர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மழுங்கடிப்பதற்கும் முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பொது மக்களின் காணிகள் விடுக்கப்படும்போதும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறினார்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருப்பதை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அரசாங்கம் முழுமையாக வழங்கி வருகிறது என்றும் கூறினார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019