புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் ஐயா அரசிடம் கதைத்து மூடிவிட்டிருக்கலாம்

புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் நினைத்திருந்தால் அரசிடம் கதைத்து இலகுவாக மூடிவிடலாம்.ஏன் அவர் அரசிடம் கதைத்து செய்யவில்லை.

நாட்டிலே பலமான எதிர்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் ஐயா அவர்கள் கொஞ்சம் கூட வாய்திறந்து பேசாமல் வாய்மூடி மௌனீயாக இருப்பது தமிழ்மக்கள் மத்தியில் பாரியதொரு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் தருமலிங்கம்-ஹெங்காதரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் பெரியகல்லாறு கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(9.9.2018)பிற்பகல் 4.30 மணியளவில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அமைப்பாளர் அவர்களின் ஆலோசகர் சபாவதி நோவேட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ரீ.யஜேந்திரசா,வெல்லாவெளி இணைப்பாளர் ஏ.ஜெயராஜ் கண்ணன்,அமைப்பாளரின் செயலாளர் ஜோன் பிரசன்னபிள்ளை,உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தொடர்ந்து பேசுகையில் :-தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத்தொகுதியிலேயே 92316 வாக்குகள் தமிழ்மக்களிடம் இருக்கின்றது.

இந்த வாக்குகளை தமிழ்மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் அல்லது ஆளுந்தரப்புக்கு வாக்களித்திருந்தால் தமிழ்மக்கள் மூன்று அமைச்சர்களை பெற்றிருக்கலாம்.

தற்போது பட்டிருப்புத்தொகுதியில் தமிழரசுக்கட்சியில்  பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பொதுமக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள்.இது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் விட்ட பாரியதொரு பிழையாகும்.இதனால் தமிழர்களாகிய நாம் அவமானம் சுமந்து வாழ்கின்றோம்.

பட்டிருப்புத் தொகுதியில் உள்ள தமிழ்மக்கள் தங்களின் வாக்குகளைப் ஆளுந்தரப்பு கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்று அமைச்சர்களை உருவாக்கலாம்.

92316 வாக்குகளை கொண்ட பட்டிருப்பு தொகுதியானது முஸ்லிம் மக்களின் தொகுதியாக இருந்திருந்தால் இன்று மூன்று அமைச்சர்களை பெற்றுக்கொண்டு பாரியதொரு அபிவிருத்தியை செய்து வளம்கொழிக்கும் பிரதேசமாக மாற்றிருப்பார்கள்.

தமிழ்மக்கள் விட்டபிழையை இனிமேலும் தவறாக பயன்படுத்தாமல் ஆளும்தரப்புக்கு இடுவதன்மூலம் தரமான அமைச்சுப்பதவிகளை பெறமுடியும்.ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17000 வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஹிஸ்புல்லா இன்று மாவட்டத்தில் கதாநாயகனாக திகழ்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்மக்களின் வாக்குகள் மூன்று இலட்சம் இருக்கின்றது.ஒழுங்காக தமிழ்மக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு  வாக்களித்திருந்தால் ஹிஸ்புல்லாவை வீட்டுக்கு  அனுப்பியிருக்கலாம்.புல்லுமலை தொழிற்சாலை பிரச்சனையென்று இன்று மாவட்டத்தில் பிரச்சனை தோன்றிருக்காது.

தமிழர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் மாவட்டத்தின் தமிழ்பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்யலாம்.இதனை மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள்,அரசியல்வாதிகள்,த<wbr />மிழர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

மட்டக்களப்பு புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை பிரச்சனை தற்போது பரவலாக பேசப்படுகின்றது.இந்த குடிநீர் தொழிற்சாலை பிரச்சனையை எதிர்கட்சித்தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்திருந்தால் மிகவும் சுலபமா அரசிடம் கதைத்து தொழிற்சாலையை மூடிவிடலாம் மூடிவிட்டிருக்கலாம்.

ஏன் இதனை சம்பந்தன் ஐயா செய்யவில்லை.தமிழ்மக்கள் இதனை சற்று ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும்.வாக்களித்த மக்களுக்கு சம்பந்தன் ஐயா இதுவரையும் உருப்படியாக செய்தவேலை என்ன? தமிழ்மக்களுக்கு இதுவரையும் தீர்வு பெற்றுக்கொடுத்திருக்கின்றாரா..?

தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் சொல்லியாகவேண்டும்.புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை மிகவும் சுலபமாக கதைத்து தீர்த்திருக்கலாமே.அதை ஏன் செய்யவில்லை.அவருக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யனும் என்று நம்பிக்கையையுமில்லை  விசுவாசமில்லை.

பட்டிருப்பு தொகுதியில் உள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை,மண்டூர் பகுதியில் மிகவிரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் திறக்கவுள்ளேன்.இதன்மூலம் மக்களின் பிரச்சனைகள்,தேவைகள்,அபிவிருத்திவிடயங்களை விரைவுபடுத்தி செய்யவுள்ளோம்.

நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மலசலக்கூடங்களை அமைக்கவுள்ளோம்.வீடமைப்புவசதிகள்,வீதிபுனரமைப்பு, குளங்கள் புனரமைப்பு வேலைகளை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அவர்களிடம் கதைத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் எனத்தெரிவித்தார்.

Ninaivil

திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
திருமதி பாலசுப்பிரமணியம் விக்னேஸ்வரி (பேபி)
யாழ். கொக்குவில்
ஜெர்மனி
11 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 13, 2018
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
திரு அழகரத்தினம் மோகனநாதன் (மதன்)
வவுனியா
சுவிஸ்
7 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 12, 2018
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
திருமதி கனகரத்தினம் செல்லம்மா
யாழ். கட்டுவன்
கனடா
10 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 11, 2018