பத்தாண்டுகளில் மோசமான சூறாவளி – கிழக்கு பிராந்திய மக்கள் வௌியேற்றம்

அமெரிக்காவின் கிழக்கு பிராந்திய கடல் பகுதியை கடந்த பத்தாண்டுகளில் இல்லாதவாறு மிக மோசமான சூறாவளி தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளனர். இதன்போது, சுமார் 10 லட்சம் மக்கள் கரையோரப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்,

நான்காம் நிலை சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டுள்ள ப்ளோரன்ஸ் என்ற சூறாவளி மணிக்கு 195 கிலோமீற்றர் வேகத்தில் கடந்து செல்லும் என்று பொதுமக்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் கடும் மற்றும் வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வட கரோலினா முதல்வர் ரோய் கூப்பர் பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், வடக்கு கரோலினா மற்றும் வெர்ஜினியா ஆகிய பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வட கரோலினாவுக்கு தென்கிழக்காக சுமார் 1980 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள ப்ளோரன்ஸ் நாளை (புதன்கிழமை) தரையை தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தால் (NOAA) பெறப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், மேகங்கள் சூறாவளியின் பாதையில் தொடர்ந்து செல்லும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

Ninaivil

திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018
திருமதி பசுபதி இராசமணி
திருமதி பசுபதி இராசமணி
யாழ். பலாலி
பிரான்ஸ்
12 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 14, 2018