இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த இந்திய பா.ஜ.க தலைவர்!


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேறைய தினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயம் இந்திய அரசாங்கத்துடனான அவரது உறவுகள் மீண்டும் நெருக்கமடைவதை புலப்படுத்துகின்றது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2006 முதல் 2009 வரை மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகள் மூலம் விடுதலைப்புலிகளின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்த பெருமைக்குரியவர் என கருதப்படும் மஹிந்த ராஜபக்ச சுப்பிரமணியம் சுவாமியின் தலைமையிலான விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என அழைக்கப்படும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் இந்திய இலங்கை உறவுகள் குறித்து உரையாற்றவுள்ளார் என அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர், பாதுகாப்பு ஆலோசகர், காங்கிரஸின் முன்னாள் தலைவி உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த சந்திப்புகள் குறித்து இதுவரை எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை எனவே இவை தனிப்பட்ட சந்திப்புகளாக அமையலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் இந்தியா சென்றுள்ள மகன் நாமல் ராஜபக்சவை அரசியலில் வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த வாரம் கொழும்பில் மஹிந்த அணியினர் முன்னெடுத்திருந்த பாரிய ஆர்ப்பாட்ட பின்னணியை சுட்டிக்காட்டியுள்ள இந்திய ஊடகம் மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ச மூன்று வருடங்களாக ஆட்சியில் இல்லாதபோதிலும் தொடர்ந்தும் வலுவான சக்தியாக விளங்குகின்றார் பிளவுபட்டுள்ள அரசாங்கத்திற்கு அடிக்கடி சவால் விடுக்கின்றார் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

மஹிந்தவின் இந்திய விஜயத்தின் போது, பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­ப­தியும், அடுத்த ஜனா­தி­ப­தி­யா­கவும் வர உள்­ளவர், விராட் இந்­துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்­து­கொள்ள புது­டில்லி வந்­துள்ளார். நாளை பொதுக்­கூட்­டத்தில் உரையாற்றவுள்ளார்” என சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி குறிப் பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ “இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி என்­ப­துடன், எதிர்­கால ஜனா­தி­ப­தி­யாகவும் வரவுள்ளார்” என்று சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி தெரி­வித்­துள்ளார். மஹிந்­தவின் புது­டில்லி விஜயம் குறித்து அவர், தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளி­யிடும் போதே இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018