இராணுவ தளபதி மனம்போன போக்கில் செயற்படுகிறார்

இராணுவ கல்வி பீடத்தில் கல்வி பயிலாது இராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மகேஸ் சேனாநாயக்க, அனைத்தும் தெரிந்தது போன்று மனம்போன போக்கில் செயற்படுவதாக, பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

இராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கடுமையாக சாடியிருந்த நிலையில், அது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தற்போதைய இராணுவ தளபதி இராணுவ படையணியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

இராணுவ பாதுகாப்பு பீடத்தில் முறையாக கல்வி பயிலாது, இராணுவ தளபதியாக பதவியை பொறுப்பேற்றவுடன் மனம் போன போக்கில் செயற்பட்டு வருகிறார்.

யுத்த காலத்தில் சேவையில் இருந்த 40 வருட அனுபவம் கொண்டவர் என்ற வகையில், யுத்தமற்ற சூழ்நிலையில் நாட்டின் தேவையை புரிந்துக் கொள்வது எனக்கு கடினமான விடயமல்ல.

ஆனால், தற்போதைய இராணுவ தளபதியோ இடி அமீன் போன்று செயற்பட்டு வருகின்றார். இவரை போன்றதொருவரை நான் இதுவரை கண்டிருக்கவில்லை” எனக் குறிப்பிட்டார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018