பிரித்தானியாவில் உடலுக்கு வெளியில் இதயத்துடன் பிறந்த குழந்தை!

உடலுக்கு வெளிப்புறமாக இதயத்தினைக் கொண்டு பிரித்தானியாவில் பிறந்த குழந்தைக்கு, அதனுடைய வீட்டிலேயே வளர்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெனல்லொப் வில்கின்ஸ் என்ற பெயர்கொண்ட குறித்த பெண்குழந்தை, பல மாதங்களாக விஷேட மருத்துவ பராமரிப்பு மற்றும் சிகிச்சையினைப் பெற்றுவந்தது. இந்நிலையில்,  நேற்று (திங்கட்கிழமை) அதனுடைய பெற்றோர்களுடன் வீடுசெல்ல சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் அனுமதியளித்துள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி குறைப்பிரசவத்தில் சத்திரசிகிச்சை மூலம் பிறந்த வெனல்லொப் வில்கின்ஸிற்கு வழமைக்கு மாறாக இதயம் நெஞ்சுப் புறமாக உடலுக்கு வெளியில் உள்ளது. இதனால் அக்குழந்தை உயிர்பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதமே உண்டு என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், குழந்தை வெனல்லொப் வில்கின்ஸ் ஒன்பது மாதங்களில் 3 சத்திரசிகிச்சைகளை வெற்றிகரமாக  மேற்கொண்டு ஆரோக்கியமான நிலையில் நேற்று தங்கள் பெற்றோருடன் வீடுசென்றுள்ளது.

மத்திய இங்கிலாந்தின் புல்வெல் நகரிலுள்ள இக்குழந்தையின் பெற்றோர்களான நோமி ஃபைன்ட் லே மற்றும் டீன் வில்கின்ஸ், தமது வீட்டில் குழந்தைக்கு ஏற்றாற்போல் விஷேட மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவிலேயே இதுவரை இவ்வாறான குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளில் வெனல்லொப் வில்கின்ஸே முதலில் உயிர் பிழைத்த குழந்தையென்பது குறிப்பிடத்தக்கது.

 

Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019