இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைச்சங்கம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ம் திகதி புதன்கிழமை நாடு முழுவதும் கீழ்வரும் கோரிக்கைகளோடு முன்னெடுக்கும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தனது பூரண ஆதரவை வழங்கி நிற்கிறது.

1. ஏற்கனவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள மற்றும் ஆட்சேர்ப்பு செய்து கல்வித் தகைமைக்கு இணையாக அரச மற்றும் மாகாண அரச சேவை MN 4 பட்டதாரிகள் MN 5 சம்பள

தரத்திற்கு உள்வாங்கப்படல் வேண்டும். 

2. மத்திய மற்றும் மாகாண அரச சேவை பட்டதாரிகளுக்கு பதவி உயர்வுடன் கூடிய உயர்வுச்

செயன்முறையை தயாரித்தல் வேண்டும். 

3. 06/2006 மற்றும் 5/2016 சம்பள சுற்றறிக்கை ஊடாக ஏற்படுத்தப்பட்டுள்ள சம்பள ஏற்ற இறக்கங்களை நீக்கி பட்டதாரிகளுக்கு நியாயமான அடிப்படைச் சம்பளம் மற்றும் சம்பள உயர்வு அலகை அதிகரித்தல். 

4. தகைமை அற்ற தொழில்களை நியமிப்பதை நிறுத்தி தகைமையுடைய மற்றும் நியாயமான

செயன்முறையை பெற்றுக்கொடுத்தல். 

5. இரண்டாம் மொழி ஆற்றல் தொடர்பாக எழுத்து, பேச்சு பரீட்சைகளுக்கு பதிலாக

ஏற்றுக்கொள்ளப்பட்ட மணித்தியாலங்கள் கொண்ட கற்கை நெறிகளை பெற்றுக்கொடுத்தல். 

6. ஒருங்கிணைந்த படிகள் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் பணி வெற்றிடம்

சம்பந்தமாக பதில் கடமை கண்காணிப்பதற்கு மாத்திரம் ஈடுபடுத்துதல், மற்றும் பதில் கடமை கண்காணிப்புக்கு உரிய கொடுப்பனவு உட்பட சகல வெளிக்கள உத்தியோத்தினர்களினதும்

பிரயாணச் செலவு கொடுப்பனவுகளை உயர்த்துதல், 

7. வெளிக்கள உத்தியோகத்தர் சம்பந்தமாக பெற்றுக்கொண்ட கட்டண வரி இன்றிய இரு

சக்கர வண்டிகளின் உரிமையில் குறைப்புக்கள் இன்றி உடனடியாக பெற்றுக்கொடுத்தல். 

8. 2016.01.01 முதல் அரசு ஊழியர்களுக்காக நீக்கப்பட்டுள்ள தற்போதைய ஓய்வூதியம் சம்பளக்

கொடுப்பனவு முறையானது மீண்டும் வழங்குதல்.

மேற்படி கோரிக்கைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் செப்டம்பர் 12ம் திகதி புதன்கிழமை சேவையில் அறிக்கையிடுவதைத் தவிர்த்து போராட்டத்தை வெற்றியடைச் செய்ய ஒத்துழைக்குமாறு வேண்டி நிற்கின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற உள்ள போராட்டத்தில் ஒன்றிணைவோம்.

உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒன்றிணைந்து சுமூகமாக போராட்டத்தை நடத்துவோம்.

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018