மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்- திலீபன்

1987 ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 15ம் நாள் தமிழீழ விடுதலைக்காக நீதி கோரி இந்திய அரசிடம்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் ஆலைய முன்றலில் ஜந்தம்ச கேரிக்கையினை முன்வைத்து சாகுவரையில் உண்ணா நோன்பிருந்த தியாகம் நிறைந்த வீரச்சாவடைந்த திலீபன் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவுகள் சுமந்த நாட்கள் இவை.. 

திலீபன் அவர்கள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைகள் வருமாறு:- 

1* பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும். 

2* புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.

4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 

5* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள் பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ காவல் நிலையங்கள் மூடப்படவேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் அவர்கள் முன்னெடுத்த அகிம்சை வளிப்பயணம் தொடங்கப்பட்ட நாள் இன்றாகும் அதை இன்றை நாளினை நினைவிற் கொள்கின்றோம். 

இயற்கையின் விதிக்கு அமைவாக எதிர் காலத்தினை எதிர்பார்க்கும் ஈழத் தமிழினம் ஒருபக்கம் வாழவும் ஒருபக்கம் சாவுமாக வாழ்வினது வரலாறு பதியப்பட்டுள்ளது . 

அதற்கான புரிதலாக வடமாகாணத் தேர்தல் அமைகின்றது. அதனை பயன்படுத்த தமிழினம் தம்மை அடையாளம் காணப்படுவது போல் சர்வதேசமும் தம்மை ,தமது கடமையை நிரூபிக்க வேண்டும். உலகின் அத்தனை இனங்களையும் போல் தமிழினத்தின் உரிமைக்கும் சர்வதேசத்தால் தீர்வு காணப்பட வேண்டும். என்பதே காலத்தின் அவசியம். 

அதனை அடையாளப்படுத்த உருவாக்கப்பட்ட நாடு.கடந்த. தமிழீழ அரசாங்கம் ஆனது இயற்கையினது விதிக்கு அமைவானது . அதில் வெற்றிகாணும் போது அனைத்துலகத்தால் ஈழத்தின் வரலாற்றையும் இனம் காணமுடியும்.  

உண்மைக்கு நிகராக உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை உண்மை வழிகளில் உலகத் தமிழினத்தால் ஏற்கப்படாத வரை அடுத்தவர்களது குறைகளை அடையாளம் காண முடியுமே தவிர உலகத்தை மாற்ற முடியாது. 

அதனால் நாம் எமது பாதையில் சரியாக செயல் படுவோமாக இருந்தால் சிங்கள தேசத்தால் மகாவம்சம் உருவாக்கப்பட்டிருக்காது. அரசியல் சுதந்திரத்தை பெற்று, சிங்கக் கொடி ஏற்றி, சிங்கள தேசத்தை உருவாக்கி இனவாதத்தை வளரத்திருக்கவும் முடியாது. என்பது மட்டுமல்ல  

ஈழத் தமிழினம் தமிழீழத்திற்காக 30வருட ஆயுதப் போராடத்தை இலங்கை அரசாங்கம் நினைத்தது போல் அழிக்க முடியவில்லை, மாறாக இலங்கைத் தீவிலு, சர்வதேச அரங்கில்  சமகாலத்தில் அரசியல் களம் அமைத்துள்ளது என்றால் மிகையாகாது. மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின்  மறு வடிவமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசை  உலகத் தமிழினத்தால் அடையாளம் காணப்படாத போது எப்படி அனைத்துலகம் எமது விடுதலைக்கு தீர்வு காண்பது?  

தமிழினத்துக்குத் துரோகமிழைப்பவர்கள் தமது மனச் சாட்சிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என கிளிநொச்சி ஜெயபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா சம்பந்தர் அவர்கள் தன்னை ஒரு இராஜ தந்திரியாக  நிரூபித்துள்ளார். இன்றைய சூழல்களுக்கு ஏற்றவகையில் ஒரு  சரியான தலமையை இனம் காட்டி. அதனைப் போல்   நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த காலத்தை  உண்மை நிலைகளின் அடிப்படையில் இனம் காட்டி நிரூபிக்க வேண்டும். உரத்து கூறுவதால் எதனையும் உண்மைகள் ஆக்கி விட முடியாது.  காலம்   சந்தற்பத்தை தந்தால் அதனை பயன்படுதப்படாத வரை எதிரிக்கு அது சந்தற்பமாக அமைகின்றது.  

ஈழத் தமிழினமாகிய   எமது எதிர்கால  எதிர்பார்புக்கள், இனவாத அரசாங்கத்தினது பிடியில் இருந்து ஈழத் தமிழினம் மீட்கப்பட வேண்டும்  என்பதே. 

இலங்கையின் எதிர்காலத்தை  புரிந்து தமிழினத்தின் தலமைத்துவத்தை பொறுப்பேற்றுள்ள முன்னாள நீதி அரசர் பெருமதிப்பிற்குரிய  திரு.விக்னேஸ்வரன் அவர்களது செயல்திறன் மிக்க செயல்பாட்டினை இதுவரை அவர் நிரூபித்து வரும் நிலையில்  தனது விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பது அவரது பெரும் தன்மையையும் மனித நேயத்தையும்  புரிந்துகொள்ள முடிகின்றது .

அதனைப் போல் பலர் கடந்த காலங்களில் செயல்பட முடியவில்லை என்பதனை விட இலங்கை அரசாங்கம் யாரையாவது குறிவைத்து விட்டால் அவரை விலை பேசி அழிக்கும் வரை உறங்காமல் தமது செயல்பாடுகளை  முன்னெடுக்கும் என்பது, பல துரோகத் தனங்களின் ஊடாக உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வாறான நடவடிக்கைகளில் அரசாங்கம் தோற்றுப் போன பக்கம்தான் தந்தை செல்வநாயகம் அவர்களின் பாதையும், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களது பாதையும் ஆகும். 

அதனால் பெருமதிப்பிற்குரிய  திரு .விக்னேஸ்வரன் அவர்களது செயல்திறன் மிக்க செயல்பாட்டினை   தற்போதைய செயல்பாட்டின் திருப்திப்பாட்டினை  தமிழினம் பயன்படுத்த  வேண்டுமானால்,   அதற்கான பங்கை தமிழினமும், சர்வதேசமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். எத்தனை அவதாரங்கள் பிறப்பெடுத்தாலும்  சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் மூள்கடிகப்படுவதால்  ஈழத்தமிழினத்தின் வரலாறு தோற்கடிகப்பட முடியாதபக்கம் எது என்பதனை இந்த உலகம் மறுப்பதே இத்தனை அழிவுகள் தொடர்வதற்கும் காரணம்.

கடந்த கால  ஆயுதப் போராடத்தால் தமிழினம் பாதிகப்பட்டாதாக கூறி சர்வதேச அரங்கில்    சிங்கள தேசம்  பல வழிகளில் எடுக்கும் பொய்ப் பிரச்சார முயற்சி வெற்றிகண்டமையே  எமது இனத்தின் அவலத்திற்கான காரணம் மட்டுமல்ல இலங்கை அரசாங்கத்தினது  தவறுகளுக்குமான காரணங்களும்.  

அதனால்   தற்போதைய சந்தற்பத்தில் எமது இனத்தின் எதிர்காலம் பாதுகாக்கப் படுவதற்கான சந்தற்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினது வழியில் தொடர்நது இந்தியா உட்பட்ட சர்வதேசம் முன்னெடுகப்பட வேணடும் என்பது   மட்டும் அல்ல, எம்மிடம் எமது வரலாறு  ஒரு பாதையை அமைத்து தந்தமை இத்தனைக்கும் காரணம்  .   

1* புனர்வாழ்வு என்ற பெயரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக் காவலில், அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும். 

2* தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும். 

3* இடைக்கால அரசு   நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும். 

4* வடகிழக்கு மாகாணங்களில் இராணுவ நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 

5* அலகின் அடிப்படையில்   தமிழினத்திற்கான தனித்தவமான பாதுகாப்பு   அரசியல் நிர்வாகம் அமைக்கும் வரை  இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய   அரசியல் செயல்பாடுகள்   தடுகப்பட வேண்டும்.  

காரணம் ஆயுதம் ஏந்தி தமிழினத்தின் போராடத்தை   தமது வெற்றியாக கருதி  தமிழினத்தை அழிப்பதற்கு சர்வதேச ஆதரவினை பயன்படுத்தி   ஒரு வரலாற்றுப் பூமியை    வாழ்வாதாரம் அற்ற பூமியாகவும் மனிதாபிமானம் அற்ற இனவாதத்திறகு மக்களது அடிமை வாழ்வு தொடர்வதனை காலதாமதம்  இன்றி சர்வதேசத்தால் தடுகப்பட வேண்டும். 

வரலாற்றின் விதிவழியே விடுதலைப் பயணமும், நம்பிக்கை வழியில் ஈழத் தமிழினத்தின் விடுதலையும் அடையாளம் காணப்பட வேண்டும்.

உண்மையடன் 

சுவிஸ்தயா.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018