பெட்ரோல் விலை உயா்வுக்கு போராட்டம் நடத்தினாரா தோனி? வைரலாகும் புகைப்படம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கடந்த திங்கள் கிழமை எதிா்க்கட்சிகள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி பங்கேற்றதாக புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில தினங்களாக விண்ணை முட்டும் அளவிற்கு உயா்ந்து வருகிறது. விலை உயா்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை நடத்தியது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கலந்து கொண்டன. 

இந்நிலையில் முழு அடைப்பு போராட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரா் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி உள்ளிட்டோா் பெட்ரோல் நிலையத்தில் அமா்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திாிகை தெளிவுபடுத்தி உள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா இணையதள பக்கத்தில் இது தொடா்பான செய்தியில், தோனியின் புகைப்படம் போராட்டத்தில் பங்கேற்ற புகைப்படம் கிடையாது. அது அவா் சமீபத்தில் சிம்லாவிற்கு சென்றிருந்தபோது அவரது மனைவி மற்றும் நண்பா்களுடன் அமா்ந்திருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை தெளிவு படுத்தியுள்ளது. 

டெஸ்ட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில் தனது குடும்பத்தினருடன் பொழுதை கழித்துக் கொண்டு இருக்கிறாா். 

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018